விஜய் பேசுவதில் சிக்கல் - கட்டுக்கடங்காத தொண்டர்கள் கூட்டத்தில் திணறும் திருச்சி
2026 சட்டசபை தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், அரசியல் கட்சி தலைவர்கள் பிரச்சாரத்தை தொடங்கி விட்டனர்.
விஜய் திருச்சி பிரச்சாரம்
அதே போல் புதிதாக கட்சி தொடங்கியுள்ள தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், இன்று திருச்சியில் இருந்து தனது தேர்தல் பிரச்சாரத்தை தொடங்க உள்ளார்.
இதற்காக சென்னையில் இன்று தனி விமானம் மூலம் திருச்சி சென்ற தவெக தலைவர் விஜய், அங்கிருந்து பிரச்சார வாகனம் மூலம் திருச்சி மரக்கடை பகுதிக்கு அங்கு பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார்.
அங்கு அவருக்கு 10;30 முதல் 11;00 மணி வரை பேச காவல்துறை அனுமதி வழங்கி இருந்தது. இன்று அடுத்தது, பெரம்பலூர், அரியலூர் உள்ளிட்ட பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார்.
விஜய்யை நேரில் காண தமிழகம் முழுவதும் இருந்து தொண்டர்கள் திருச்சிக்கு வந்து குவிந்துள்ளனர்.
விமான நிலையத்தில் இருந்து அவரது வாகனத்தை தொண்டர்கள் சூழ்ந்துள்ளதால், வாகனம் மெதுவாக ஊர்ந்து செல்கிறது. விஜய் செல்லும் பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
பிரச்சாரம் செய்ய உள்ள பகுதிக்கு அவர் செல்ல இன்னும் 30 நிமிடங்களுக்கு மேல் ஆகும் என்பதால், அவர் அனுமதி அளிக்கப்பட்ட நேரத்தில் பேசுவதில் சிக்கல் எழுந்துள்ளது.
அனுமதி அளிக்கப்பட்ட நேரத்தை தாண்டி பேசினால், விஜய் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்ய வாய்ப்புள்ளது.