முதலமைச்சர் விஜய் தாராபுரத்தில் நாளை பிரசாரம்

C Joseph Vijay
By Fathima Sep 29, 2026 05:33 AM GMT
Report

முதலமைச்சர் விஜய் தாராபுரத்தில் நாளை பிரசாரம் மேற்கொள்ளவுள்ள நிலையில் பிரம்மாண்ட மேடை தயாராகி வருகிறது.

மதுராந்தகம்(தனி), தாராபுரம்(தனி) ஆகிய 2 தனித்தொகுதிகளுக்கு அக்டோபர் 6ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் பிரசார களம் சூடுபிடித்துள்ளது.

இந்நிலையில் தவெக கட்சி சார்பில் போட்டியிடும் மரகதம் குமரவேல் அவர்களை ஆதரித்து முதலமைச்சர் விஜய் ஏற்கனவே பிரசாரம் மேற்கொண்ட நிலையில் நாளை சத்யபாமாவை ஆதரித்து பிரசாரம் மேற்கொள்கிறார்.

முதலமைச்சர் விஜய் தாராபுரத்தில் நாளை பிரசாரம் | Vijay Campaign In Dharapuram 

இதற்காக தாராபுரம் உடுமலை சாலையில் 34 ஏக்கர் பரப்பளவில் இடம் தேர்வு செய்யப்பட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.

சாலையின் இருபுறமும் தடுப்புகள் அமைக்கப்பட்டு 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலிசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.