நெல்சனுக்கு போன் செய்த விஜய் - இப்படியா சொன்னார்..!
சன்பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் இயக்கத்தில் அனிருத் இசையில் விஜய் மற்றும் பூஜா ஹெக்டே தயாரிப்பில் உருவான திரைப்படம் பீஸ்ட்.
இந்த திரைப்படம் கடந்த ஏப்ரல் 13 ஆம் தேதி வெளியானது.பெரும் எதிர்பார்ப்பை பெற்றிருந்த இந்த திரைப்படம் ரசிகர்களின் கலவையான விமர்சனங்களை பெற்றுள்ளது.
முதல் நாளில் உலகம் முழுவதும் சுமார் 50 கோடி வசூலை கடந்த பீஸ்ட் திரைப்படம் இரண்டே நாளில் 100 கோடி வசூலை கடந்ததாக கூறப்பட்டது.
தற்போது முதல் வார இறுதியில் மொத்தம் 5 நாட்களில் ரூ.200 கோடி வசூலை கடந்துவிட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் நெல்சனுக்கு நடிகர் விஜய் போன் செய்து பேசியதா சில தகவல் வெளியாகியுள்ளது.
அப்போது பேசிய நடிகர் விஜய் படத்திற்கு வரும் எதிர்மறையான விமர்சனங்களை கண்டு கொள்ளாதீங்க.
மீண்டும் ஒரு படம் பண்ணலாம் என கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.