அவ்வளவு பாசம்..! அம்மாவிற்காக சென்னை அருகே கோவிலே கட்டிய தளபதி
விஜய் நடிகர் விஜய் தமிழ் சினிமாவை தாண்டி தற்போது அரசியலில் தனது கவனத்தை திருப்பியுள்ளார்.
நடிகர் விஜய்
தமிழ் சினிமா என்பதை தாண்டி இந்திய சினிமாவில் பெரும் நட்சத்திரமாக உருவெடுத்துள்ளார் விஜய். உச்சநட்சத்திரமாக இருக்கும் போதே தனது கவனத்தை விஜய் அரசியல் பக்கம் திரும்பியுள்ளார்.
தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை நிறுவியுள்ள விஜய், வரும் 2026-ஆம் ஆண்டின் சட்டமன்ற தேர்தலே தங்களின் குறி என கட்சி பணிகளை தீவிர படுத்தியுள்ளார்.
அம்மாவிற்காக கோவில்
விஜய் அவரது தந்தை குறித்து அவ்வப்போது எதிர்மறையான கருத்துக்கள் வெளிவரும் நிலையில், அவர் எப்போதும் தனது அம்மாவுடன் நெருக்கமாக இருந்து வருகின்றார். நேற்று விஜய் சாய்பாபா கோவில் ஒன்றில் இருக்கும் புகைப்படம் வெளிவந்தது.
அவர் எங்கோ கோவில் சென்றுள்ளார் என்று நினைத்தால், அந்த கோவிலை காட்டியதே விஜய் தானாம். அம்மா சோபாவிற்காக சென்னை கொரட்டூரில் சாய்பாபா கோவிலை நடிகர் விஜய் கட்டிக்கொடுத்துள்ளார்.
மேலும், கொரட்டூரில் விஜய் கட்டியுள்ள இந்த ஸ்ரீ சாய் பாபா மந்திர் கோவிலின் புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளது.