நடிகர் விஜய் சொகுசு கார் வழக்கு : அபராதத்துடன் தள்ளுபடி செய்க - வணிகவரித்துறை

vijay highcourt bmwx5
By Irumporai Mar 14, 2022 10:14 AM GMT
Report

வெளிநாட்டு காரை இறக்குமதி செய்த வழக்கில், விஜய்க்கு அபாராதம் விதிக்க வேண்டும் என்று வணிகவரித்துறை தெரிவித்துள்ளது.

நடிகர் விஜய், கடந்த 2005ம் ஆண்டு அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்த 63 லட்ச ரூபாய் மதிப்புள்ள பி.எம்.டபிள்யூ. எக்ஸ்5 காருக்கு நுழைவு வரி செலுத்த தமிழக அரசு வணிக வரித்துறை உத்தரவிட்டது.

இதை எதிர்த்து விஜய் தரப்பில் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. நுழைவு வரி வசூலிக்க மாநிலங்களுக்கு அதிகாரம் உள்ளது என உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்த பின், விஜய் தரப்பில் 7 லட்சத்து 98 ஆயிரத்து 75 ரூபாய் நுழைவு வரி செலுத்தப்பட்டது.    

இந்த நிலையில் , வெளிநாட்டு காரை இறக்குமதி செய்த வழக்கில், விஜய்க்கு அபாராதம் விதிக்க வேண்டும் என்று வணிகவரித்துறை தெரிவித்துள்ளது. ரோல்ஸ் ராய்ஸ் காரை நடிகர் விஜய் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்த வழக்கில், விஜயின் மனுவை அபராதத்துடன் தள்ளுபடி செய்யவேண்டும் என வணிகவரித்துறை தெரிவித்துள்ளது.