தளபதி பர்த்டே ஸ்பெஷல் காமன் டிபி: ட்விட்டரில் தெறிக்கவிடும் விஜய் ரசிகர்கள்!
விஜய் பிறந்தநாளை முன்னிட்டு அவரது ரசிகர்கள் காமன் டிபி ஒன்றை உருவாக்கி இணையத்தில் வெளியிட்டு டிரெண்ட் செய்து வருகின்றனர்.

தமிழ் சினிமாவில் உச்ச நடிகராகவும், தயாரிப்பாளர்கள் விரும்பும் பாக்ஸ் ஆபிஸ் நாயகனாகவும் திகழ்பவர் நடிகர் விஜய். குழந்தைகள்,இளைஞர்கள், பெண்கள், பெரியவர்கள் என கோடிக்கணக்கான ரசிகர்களை கொண்டுள்ள இவரின் திரைப்படம் வெளியாகும் போதெல்லாம், திரையரங்குகளை திருவிழா போல் மாற்றுவார்கள் விஜய்யின் ரசிகர்கள்.
இந்நிலையில் ஜுன் 22 ஆம் தேதி வரப் போகின்ற விஜய்யின் பிறந்தநாளை கொண்டாட இப்போது தயாராகி வருகின்றனர் அவரின் ரசிகர்கள். வழக்கமாக அவரின் பிறந்தநாளின் போது நலத்திட்ட உதவி, உணவு, ரத்த தானம் பல்வேறு சமூக பணிகளில் ஈடுபடுவார்கள் விஜய் ரசிகர்கள்.

மற்றொரு புறம் இணையத்தில் இருக்கும் விஜய் ரசிகர்கள் அவரது பிறந்தநாள் ஹேஷ்டேக்கை ட்ரெண்ட் செய்து கொண்டாடுவார்கள்.
இந்நிலையில் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு காமன் டிபி வெளியிட்டு ட்விட்டரை தெறிக்கவிட்டு வருகின்றனர் விஜய் ரசிகர்கள்.
