விஜய் பிறந்தநாளை முன்னிட்டு வெளியான மாஸான போஸ்டர் - ரசிகர்கள் உற்சாகம்
இன்னும் சில தினங்களில் நடிகர் விஜய்யின் பிறந்தநாள் கொண்டாடப்பட உள்ள நிலையில் மாஸ்டர் பட தயாரிப்பாளர் போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
நடிகர்கள் விஜய், விஜய்சேதுபதி நடிப்பில் கடந்த பொங்கலன்று வெளியான திரைப்படம் "மாஸ்டர்". இந்தாண்டு திரையரங்குகளில் ரிலீசான படங்களில் அதிக வசூல் செய்த இந்த படத்தை விஜய்யின் உறவினர் சேவியர் பிரிட்டோ மற்றும் செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ சார்பில் லலித்குமார் ஆகியோர் இணைந்து தயாரித்திருந்தனர்.
இதனிடையே வருகிற ஜூன் 22 ஆம் தேதி நடிகர் விஜய்யின் பிறந்தநாள் வருகிறது.அதற்கு வாழ்த்து தெரிவிக்கும் விதமாக செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் சார்பில் சிறப்பு போஸ்டர் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
அதில் நடிகர் விஜய் இதுவரை நடித்த 64 படங்களில் இடம்பெறும் கதாபாத்திரங்கள் அனைத்தையும் ஒன்றிணைத்து வடிவமைக்கப்பட்டுள்ளது.