விஜய் பிறந்தநாளைக் கொண்டாடிய அஜித் ரசிகர்கள்
Vijay birthday
Halwa city Ajith fans
By Petchi Avudaiappan
நடிகர் விஜய்யின் பிறந்தநாளையொட்டி திருநெல்வேலி அஜித் ரசிகர்கள் 100 பேருக்கு உணவு வழங்கி கொண்டாடியுள்ளனர்.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களாக திகழும் அஜித் மற்றும் விஜயின் ரசிகர்கள் அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் கருத்து மோதலில் ஈடுபடுவது வழக்கம்.
இருவரது படங்களோ, இல்லை அது குறித்த அப்டேட்டோ வெளியானால் சமூக வலைதளங்களில் ட்ரெண்ட் செய்து மாஸ் காட்டுவார்கள்.

இந்நிலையில், திருநெல்வேலி ’அல்வா சிட்டி அஜித் ஃபேன்ஸ்’ வித்தியாசமாக ’அஜித்தின் நண்பர் விஜய். அதனால், அவரது பிறந்தநாளையும் கொண்டாடுவோம்’ என்றுக்கூறி நட்புடன் விஜய்யின் 47 வது பிறந்தநாளையொட்டி இன்று காலை 100 பேருக்கு உணவு வழங்கி சிறப்பித்துள்ளனர்.