2021 ஆம் ஆண்டு ட்விட்டரை தெறிக்க விட்ட நடிகர் விஜய் - ரசிகர்கள் மகிழ்ச்சி
2021 ஆம் ஆண்டில் அதிகம் லைக் செய்யப்பட்ட ட்வீட்டாக நடிகர் விஜய்யின் பீஸ்ட் ஃபர்ஸ்ட் லுக் இடம் பெற்றுள்ளது.
அரசியல்வாதிகள், சினிமாத்துறையினர் என உலகின் அத்தனை பெரும்பாலான பிரபலங்களுக்கும் அவர்களது ரசிகர்களுக்கும் ட்விட்டர் உறவுப்பாலமாக இருக்கிறது. குறிப்பாக, சினிமா துறையினர் தங்கள் புதுப்பட அறிவிப்புகள், வெளியீட்டுத் தேதிகள் உள்ளிட்ட அனைத்தையும் ட்விட்டர் மூலமே அதிகம் வெளியிடுகின்றனர்.
ரசிகர்களும் தங்களுக்கு பிடித்த நடிகர்களின் படங்கள் வெளியாகும்போது ஹேஷ்டேக்கில் தங்கள் கருத்துகளைப் பகிர்ந்து வருகிறார்கள். அதனையொட்டி ட்விட்டரில் அதிகம் பகிரப்பட்ட ஹேஷ்டேக், அதிகம் ட்வீட் செய்யப்பட்ட நடிகர் பெயர் என ஒவ்வொரு ஆண்டின் இறுதியிலும் ட்விட்டர் இந்தியா நிறுவனம் பட்டியலை வெளியிட்டு வருகிறது.
hashtags that kept the conversation going ? pic.twitter.com/OGEAktTUGp
— Twitter India (@TwitterIndia) December 9, 2021
அதன்படி 2021 ஆம் ஆண்டில் ட்விட்டர் வெளியிட்டப் பட்டியலில் இந்தியாவில் அதிகம் பகிரப்பட்ட ஹேஷ்டேக்கில் நடிகர் விஜய்யின் ‘மாஸ்டர்’ படம் இடம்பிடித்துள்ளது. இதில் கொரோனா ஹேஷ்டேக் முதலிடத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்த பத்து ஹேஷ்டேக்கிலும் இடம்பிடித்த ஒரே சினிமா பெயர் ‘மாஸ்டர்’ தான். மேலும் சினிமாவில் விஜய்யின் ’பீஸ்ட்’ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் அதிக லைக்குகள் மற்றும் அதிக ரீட்வீட் செய்யப்பட்ட போஸ்டர் என்றும் அறிவித்துள்ளது.
மேலும் 2021ம் ஆண்டு அதிகமாக பேசப்பட்ட டாப் 5 படங்களில் விஜய்யின் Master மற்றும் Beast ஆகிய இரண்டு படங்கள் முதல் மற்றும் 3வது இடம்பெற்றுள்ளது. அஜித்தின் வலிமை 2வது இடத்தை பிடித்துள்ளது. சூர்யாவின் Jaibhim படம் 4வது இடத்தில் உள்ளது.