விஜய்யின் ‘பீஸ்ட்’ மூன்றாம் கட்ட படப்பிடிப்பு தொடங்கியது..
விஜய்யின் ‘பீஸ்ட்’ படத்தின் மூன்றாம் கட்ட படப்பிடிப்பு இன்று தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. நடிகர் விஜய் - நெல்சன் கூட்டணியில் வேகமாக உருவாகி வருகிறது.

‘பீஸ்ட்’. இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு 16 நாட்கள் ஜார்ஜியாவில் முடிந்துள்ள நிலையில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சென்னையில் தொடங்கியது. இதில் ஒரு பாடல் காட்சியும், இன்னும் சில முக்கிய காட்சிகளும் படமாக்கப்பட்டது. இந்த படப்பிடிப்பு கடந்த சில நாட்களுக்கு முன்னர் முடிவுற்றது.

இதையடுத்து மூன்றாம் கட்ட படப்பிடிப்பு இன்று சென்னை விமான நிலையம் அருகே உள்ள ஒரு படத்தில் இன்று தொடங்கியது. 3 நாட்கள் நடைபெறும் இந்த படப்பிடிப்பில் சில காட்சிகள் படமாக்கப்பட உள்ளது. இந்த படப்பிடிப்பை முடித்து விஜய் மற்றும் படக்குழுவினர் ரஷ்யாவுக்கு செல்லவுள்ளனர். அங்கு முக்கியமான சில ஆக்ஷன் காட்சிகளை படமாக்கவுள்ளனர். இதனால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது.
இப்படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அனிரூத் இசையமைக்கும் இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்து வருகிறார். சன் பிக்சர்ஸ் பிரம்மாண்டமாக தயாரித்து இப்படத்தில் அபர்ணா தாஸ், யோகிபாபு, விடிவி கணேஷ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.