‘எனக்கு 100 கோடி சம்பளம் வேண்டும்.... கறாராக கேட்கிறார் விஜய்...’ - பட்டென போட்டுடைத்த பிரபல தயாரிப்பாளர் கே.ராஜன்
நெல்சன் இயக்கத்தில், நடிகர் விஜய் நடிப்பில் ‘பீஸ்ட்’ திரைப்படம் இன்று தமிழகம் முழுவதும் வெளியாகியுள்ளது. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளனர்.
அபர்ணா தாஸ், செல்வராகவன்,கிங்ஸ்லி, யோகி பாபு என பல நடிகர் நடிகைகள் இணைந்து நடித்துள்ளனர்.
கடந்த 13-ம் தேதி ‘பீஸ்ட்’ திரைப்படம் மாபெரும் எதிர்ப்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியானது. ஆனால், இப்படம் மக்களால் வரவேற்பை பெறவில்லை. இப்படத்திற்கு மிகுந்த விமர்சங்களை மட்டுமே பெற்று வருகிறது.
இதனால் முதல் நாள் வசூலை காட்டிலும் மற்ற நாட்களில் பாக்ஸ் ஆபிஸ் கலெக்சனை போதுமான அளவு கிடைக்கவில்லை.
இப்படம் சென்னை, டெல்லி, ஜார்ஜியா உள்ளிட்ட இடங்களில் படமாக்கபட்டது. அதோடு இந்த படத்திற்கான ரூ.175 கோடி பட்ஜெட்டில் 100 கோடிக்கு மேல் சம்பளமாக வழங்கப்பட்டதாகவும் சொல்லப்படுகின்றது.
சமீபத்தில் ஆதார் ட்ரைலர் விழாவில் அருண் பாண்டியன் பேசினார். அப்போது, அஜித், விஜய் போன்ற முன்னணி நடிகர்கள் அதிக சம்பளம் வாங்குவதால் தமிழ் சினிமாவின் தரம் குறைந்து வருகிறது என்று பேசி அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்தார்.
அதே பணியில் தற்போது பிரபல தயாரிப்பாளர் கே ராஜன், நடிகர் விஜய்யை மறைமுகமாக தாக்கி விமர்சனம் செய்துள்ளார்.
மேடை ஒன்றில் பேசிய இவர், ரூ. 65 கோடி சம்பளம் வாங்கி வந்த ஹீரோ இப்போது 110 கோடி சம்பளம். ஓகே என்றால் வாங்க இல்லனா வராதீங்க என்று தயாரிப்பாளர்களிடம் கறாராக பேசி ளுக்கு கட் அண்ட் ரைட்டாக கூறுகிறார் என பேசியுள்ளார்.