கள்ளக்குறிச்சியில் தொடரும் விபரீதம் - 10 வயது சிறுவன் மேல் விழுந்த விஜய் வாழ்த்து பேனர்
சின்ன சேலத்தில் விஜய்யின் பேனர் விழுந்து 10 சிறுவன் காயம் அடைந்துள்ளார்.
விஜய்
தமிழ் சினிமாவை தாண்டி இந்தியளவில் கவனம் பெற்ற நாயகனாக மாறியுள்ளார் விஜய். தற்போது GOAT படத்தில் நடித்து வரும் அவர், தனது அரசியல் பயணத்திற்கும் அடித்தளம் இட்டுள்ளார்.
தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை பிப்ரவரி 2-ஆம் தேதி துவங்கியவர், தற்போது நடித்து வரும் படம் மற்றும் இன்னும் ஒரு படத்தில் மட்டுமே நடித்து விட்டு, அரசியலில் தீவிர கவனம் செலுத்த போவதாக தெரிவித்திருக்கிறார்.
பேனர் விபத்து
அதே நேரத்தில், விஜய்யின் அரசியல் வருகையை அவரது ரசிகர்கள் தற்போது கட்சி நிர்வாககிகளாக மாறி கொண்டாடி வருகிறார்கள்.
அண்மையில் ஜூன் 22-ஆம் தேதி தனது பிறந்தநாளை கொண்டாடினர் விஜய் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து கட்சியின் நிர்வாகிகள் மாநிலத்தின் பல இடத்திலும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் தான், கள்ளக்குறிச்சி சின்னசேலத்தில் வைக்கப்பட்ட பேனர் 10 வயது சிறுவன் ஒருவன் மீது விழுந்துள்ளது. அருகில் இரு சக்கர வாகனம் ஒன்றும் நின்றிருந்தால் அச்சிறுவனுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.
இது தொடர்பான வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலான நிலையில், பலரும் கேள்விகளை கேட்க துவங்கிவிட்டார்கள்.