மூக்கு, தாடை உடைந்த நிலையில் அறுவை சிகிச்சைக்கு பின் உயிர் பிழைத்த விஜய் ஆண்டனி

Tamil Cinema Vijay Antony Malaysia Accident
By Thahir 1 வாரம் முன்

அண்மையில் மலசியாவில் படப்பிடிப்புக்காக சென்ற போது நடிகர் விஜய் ஆண்டனி சாலை விபத்தில் சிக்கி படுகாயமடைந்த நிலையில் விரைவில் உங்கள் அனைவரிடமும் பேசுவதாக ட்வீட் செய்துள்ளார்.

விபத்தில் சிக்கிய விஜய் ஆண்டனி 

2016 ஆம் ஆண்டு சசி இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான திரைப்படம் பிச்சைக்காரன் . இத்திரைப்படம் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் வெளியாகி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது.

இப்படத்தின் இரண்டாம் பாகம் தயாராகி வருகிறது. இந்த படத்தை தயாரிப்பதோடு, இசையமைப்பாளர் மட்டுமின்றி முதல் முறையாக இப்படத்தில் விஜய் ஆண்டனி இயக்குநராகவும் அறிமுகமாகிறார்.

Vijay Antony survived after surgery

படத்தின் படப்பிடிப்பு மலேசியாவில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், லங்காவி தீவில் படப்பிடிப்பு நடைபெற்ற போது விஜய் ஆண்டனி விபத்தில் சிக்கி காயம் அடைந்தார்.

இதனால் மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் உள்ள தனியார் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

விரைவில் பேசுகிறேன் 

இதனிடையே " விஜய் ஆண்டனி மருத்துவமனையில் இருந்து வீட்டுக்கு வந்து விட்டார் என்றும், மருத்துவர் ஓய்வில் இருக்கச் சொல்லியுள்ளனர்" என்றும் இயக்குநர் சுசீந்திரன் அறிக்கை மூலம் தெரிவித்தார். அத்துடன், "கூடிய விரைவில் ரசிகர்களிடம் விஜய் ஆண்டனி பேசுவார்" என்று தெரிவித்திருந்தார்.

Vijay Antony survived after surgery

இந்த நிலையில், நடிகர் விஜய் ஆண்டனி தனது ட்விட்டர் பக்கத்தில் இன்று ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில், " அன்பு நண்பர்களே, மலேசியாவில் 'பிச்சைக்காரன் 2' படப்பிடிப்பின் போது ஏற்பட்ட விபத்தில் தாடை மற்றும் மூக்கில் எனக்குக் காயம் ஏற்பட்டது.

அதில் இருந்து பத்திரமாக மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டேன். அங்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. கூடிய விரைவில் உங்கள் அனைவரிடமும் பேசுகிறேன். எனது உடல்நிலையின் மீதான உங்கள் ஆதரவுக்கும், அக்கறைக்கும் நன்றி" என்று அவர் பதிவிட்டுள்ளார். நடிகர் விஜய் ஆண்டனியின் இந்த ட்விட்டால் அவரது ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.