அதனாலதான் மன அழுத்தம்; பிள்ளைங்கள அப்படியே விட்ருங்க - தற்கொலை குறித்து விஜய் ஆண்டனி!
இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி கடைசியாக தற்கொலை குறித்து பேசியது வைரலாகி வருகிறது.
மகள் தற்கொலை
இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி கடந்த 2016-ம் ஆண்டு பாத்திமா என்பவரை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். மூத்த மகள் மீரா 12-ம் வகுப்பு படித்து வந்தார்.
இந்நிலையில், இன்று அதிகாலை 3 மணியளவில் வீட்டில் உள்ள மின் விசிறியில் மீரா தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு மன அழுத்தம் காரணமாக கூறப்படுகிறது.
வைரல் தகவல்
தொடர்ந்து, மகளை இழந்து தவிக்கும் விஜய் ஆண்டனிக்கு ரசிகர்களும், திரையுலக பிரபலங்களும் ஆறுதல் தெரிவித்து வருகின்றனர். முன்னதாக, கடந்த சில மாதங்களுக்கு முன் விஜய் ஆண்டனி அளித்த பேட்டி ஒன்றில்,
தற்கொலை எண்ணம் நிறைய பேருக்கு வருதுனு கேள்விப்பட்டேன். நிறைய பேருக்கு அது பண பிரச்சனையால வருது. அளவுக்கு அதிகமா கமிட்மெண்ட் அப்புறம் ரொம்ப நம்பிக்கையை யார் மேலயாவது வச்சிட்டு, அவங்க ஏமாத்தும் போது வருது.
அதிகமா அது ஸ்கூல்ல தான் நடக்குது. படிப்பினால் வரக்கூடிய அழுத்தத்தால் நடக்குது. நம்மளும் என்ன பண்றோம், பிள்ளைங்க ஸ்கூல்ல இருந்து வந்த உடனே, டியூசன் போனு சொல்றோம். அவங்க ஸ்கூல்லயே படிச்சிட்டு தான் வர்றாங்க, எப்போதும் அவர்களை ஏளனமா பார்க்குறோம் சிந்திக்க டைம் இல்லாம ஆக்கிடுறோம்.
இப்படி வரக்கூடாது. அதற்கு சுற்றி உள்ளவர்கள் காரணமாக இருக்கலாம். முக்கியமாக பெற்றோர்கள். ஃபிரீயா விட்றுங்க பசங்கள. நீங்க உங்கள லவ் பண்ணாலே இதெல்லாம் வராது எனத் தெரிவித்துள்ளார். இதுகுறித்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.