விரக்தியடைந்த விஜய் ஆண்டனி - கோபத்தில் போட்ட ட்வீட்டால் ரசிகர்கள் அதிர்ச்சி
கொரோனா குறித்து நடிகரும், இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனி போட்ட ட்வீட் ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
நாடு முழுவதும் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதனுடன் ஒமைக்ரான் தொற்றும் பரவி வருவதால் மத்திய, மாநில அரசுகள் கடும் கட்டுப்பாடுகளை விதிக்க தொடங்கியுள்ளது.
இதனிடையே நடிகரும், இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதைப் பார்த்த ரசிகர்கள் பலரும் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
கொரோனா?பணக்காரனை பெரிய பணக்காரனாகவும்,
— vijayantony (@vijayantony) January 10, 2022
எழையை பிச்சைக்காரனாகவும் மாற்றும்?
எவனாவது ஹிரோஷிமா நாகசாகில போட்ட மாதிரி,
உலகத்தை ஒரேடியா பாம் போட்டு அழிசுட்டா நல்லா இருக்கும்?
வாழ்க வளமுடன்
அவரது பதிவில், ”கொரோனா பணக்காரனை பெரிய பணக்காரனாகவும், ஏழையை பிச்சைக்காரனாகவும் மாற்றும். எவனாவது ஹிரோஷிமா நாகசாகில போட்ட மாதிரி, உலகத்தை ஒரேடியா பாம் போட்டு அழிசுட்டா நல்லா இருக்கும். வாழ்க வளமுடன்” என்று தெரிவித்துள்ளார்.
இதனை பலரும் ரீட்வீட் செய்து தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். ’நம்மளைப் போலவே மன அழுத்தத்தில் இருக்கிறார் போல. இதுவும் கடந்து போகும்’ என்று அவருக்கு சிலர் ஆறுதல் கருத்திட்டு வருகின்றனர்.