என் மகள் அன்பானவள், தைரியமானவள்! அவளுடன் நானும்.. விஜய் ஆண்டனி உருக்கமான கடிதம்!
தனது மகள் மீரா குறித்து நடிகர் விஜய் ஆண்டனி உருக்கமான கடிதம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
தற்கொலை
தமிழ் திரையுலகில் பிரபல இசையமைப்பாளராகவும், பாடகராகவும் இருப்பவர் விஜய் ஆண்டனி. காதலில் விழுந்தேன், டிஸ்யூம், வேட்டைக்காரன், அங்காடித் தெரு உள்ளிட்ட படங்களுக்கு இசையமைத்து பிரபலமடைந்தார்.

அதுமட்டுமல்லாமல் நடிகராகவும் களமிறங்கி நான், காளி, பிச்சைக்காரன், சைத்தான் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். விஜய் ஆண்டனி தனது குடும்பத்தினருடன் சென்னை டிடிகே சாலையில் உள்ள வீட்டில் வசித்து வருகிறார். இவரது மகள் மீரா , சென்னை சர்ச் பார்க் பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வந்தார்.
கடந்த 19ம் தேதி அதிகாலை 3 மணியளவில் மீரா மின்விசிறியில் தூக்கு மாட்டிக்கொண்டு தற்கொலை செய்தார். இது திரையுலகிலும், ரசிகர்களிடையேயும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

அவரின் தற்கொலைக்கு மன அழுத்தமே காரணம் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் மீராவின் தந்தை விஜய் ஆண்டனி உருக்கமான பதிவொன்றை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.
பதிவு
அந்த பதிவில் "அன்பு நெஞ்ஜங்களே, என் மகள் மீரா மிகவும் அன்பானவள்,தைரியமானவள். அவள் இப்போது, இந்த உலகைவிட சிறந்த ஜாதி மதம், பணம், பொறாமை, வலி, வறுமை, வன்மம் இல்லாத ஒரு அமைதியான இடத்திற்க்குதான் சென்று இருக்கிறாள்.

என்னிடம் பேசிக்கொண்டுதான் இருக்கிறாள். அவளுடன் நானும் இறந்துவிட்டேன். நான் இப்போது அவளுக்காக நேரம் செலவிட ஆரம்பித்துவிட்டேன். அவள் பெயரில் நான் செய்யப்போகும் நல்ல காரியங்கள் அனைத்தையும், அவளே தொடங்கி வைப்பாள்.. - உங்கள் விஜய் ஆண்டணி" என்று உருக்கமாக பதிவிட்டுள்ளார். இது ரசிகர்கள் பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
வைத்தியர்களான கேதீஷ்வரன் - சத்தியமூர்த்தியின் திட்டமிட்ட ஊழல்: சபையில் வெளிப்படுத்திய அர்ச்சுனா! IBC Tamil
நடிகர் நெப்போலியன் வீட்டில் விசேஷம்! மகன் தனுஷ் - அக்ஷயா தம்பதிக்கு குவியும் வாழ்த்துக்கள் Manithan