ரசிகர்களுக்கு குட் நியூஸ் சொன்ன விஜய் ஆண்டனி... - மகிழ்ச்சியில் ரசிகர்கள்..!

Tamil Cinema
By Nandhini Feb 02, 2023 07:57 AM GMT
Report

உடல் நலம் குறித்து ரசிகர்களுக்கு நடிகர் விஜய் ஆண்டனி சமூகவலைத்தள பக்கத்தில் குட் நியூஸ் தெரிவித்துள்ளார்.

விபத்தில் சிக்கிய விஜய் ஆண்டனி

சமீபத்தில் மலேசியாவில் லங்காவி தீவில் நடந்த படப்பிடிப்பின் போது மிகப் பெரிய விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் விஜய் ஆண்டனி, நடிகை ஆகியோர் பலத்த காயமடைந்தனர். உடனடியாக இவரை மீட்ட படக்குழுவினர் லங்காவி தீவிலிருந்து கோலாலம்பூருக்கு சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டார்.

விஜய் ஆண்டனிக்கு அறுவை சிகிச்சை

சமீபத்தில் சென்னையில் உள்ள பிரபல மருத்துவமனைக்கு நடிகர் விஜய் ஆண்டனி கொண்டுவரப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது. அவர் சுயநினைவை இழந்த நிலையில் உள்ளதாகவும், முகத்தில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதோடு, பற்களும் உடைந்துள்ளதாக சொல்லப்பட்டது.

சமீபத்தில் அவருக்கு அறுவை சிகிச்சை நடந்தது. அவருடைய முகத்திலும் பிளாஸ்டிக் சர்ஜரி செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியானது.

இது குறித்து, நடிகர் விஜய் ஆண்டனி தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டார். கூடிய விரைவில் உங்கள் அனைவரிடமும் பேசுகிறேன். எனது உடல்நிலையின் மீதான உங்கள் ஆதரவுக்கும், அக்கறைக்கும் நன்றி" என்று அவர் பதிவிட்டிருந்தார்.

vijay-antony-indian-musical-composer-accident

குட் நியூஸ் சொன்ன விஜய் ஆண்டனி

இந்நிலையில், மீண்டும் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த பதிவில், அன்பு இதயங்களே... நான் 90% குணம் அடைந்து விட்டேன். உடைந்த என் தாடை, மூக்கு எலும்புகள் ஒன்று சேர்ந்துவிட்டன. என்னமோ தெரியவில்லை, நான் இப்போது முன்பைவிட அதிக சந்தோஷத்தை உங்களால் உணருகிறேன். வரும் ஏப்ரல் வெளியாகும் பிச்சைக்காரன் 2 பட வேலைகளை இன்று முதல் தொடங்குகிறேன். அன்புக்கு நன்றி என்று பதிவிட்டுள்ளார்.

தற்போது இந்த பதிவு சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த விஜய் ஆண்டனியின் ரசிகர்கள் துள்ளி குதித்து மகிழ்ச்சியில் கமெண்ட் செய்து வருகின்றனர்.