விபத்தில் பற்கள் உடைந்து, சுயநினைவை இழந்த விஜய் ஆண்டனி - ஷாக்கான ரசிகர்கள்...!

Vijay Antony Accident
By Nandhini Jan 19, 2023 10:22 AM GMT
Report

கடந்த 2016ம் ஆண்டு வெளியான ‘பிச்சைக்காரன்’ படத்திலும் கதாநாயகனாக நடித்தார். இப்படம் தமிழ், தெலுங்கில் ஹிட்டடித்தது. இந்நிலையில், விஜய் ஆண்டனி தற்போது ‘பிச்சைக்காரன் 2’ படத்தில் நடித்து வருகிறார்.

விபத்தில் சிக்கிய விஜய் ஆண்டனி

சமீபத்தில் மலேசியாவில் லங்காவி தீவில் நடந்த படப்பிடிப்பின் போது மிகப் பெரிய விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் விஜய் ஆண்டனி, நடிகை ஆகியோர் பலத்த காயமடைந்தனர். உடனடியாக இவரை மீட்ட படக்குழுவினர் லங்காவி தீவிலிருந்து கோலாலம்பூருக்கு சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டார்.

vijay-antony-indian-musical-composer-accident

சுயநினைவை இழந்த விஜய் ஆண்டனி

இந்நிலையில், சென்னையில் உள்ள பிரபல மருத்துவமனைக்கு நடிகர் விஜய் ஆண்டனி கொண்டுவரப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவர் சுயநினைவை இழந்த நிலையில் உள்ளதாகவும், முகத்தில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதோடு, பற்களும் உடைந்துள்ளதாக சொல்லப்படுகிறது.

இன்று அவருக்கு முக்கிய அறுவை சிகிச்சை நடைபெறஉள்ளதாகவும், அவருடைய முகத்திலும் பிளாஸ்டிக் சர்ஜரி செய்யப்பட உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.