சின்மயிக்கு நான் வாய்ப்பு கொடுப்பேன் - பிரபல இசையமைப்பாளர் பளீச்

Tamil Cinema Vijay Antony Chinmayi
By Sumathi Jun 10, 2025 11:33 AM GMT
Report

சின்மயிக்கு வாய்ப்பு கொடுப்பதாக விஜய் ஆண்டனி தெரிவித்துள்ளார்.

சின்மயி

'தக் லைப்' இசை வெளியீட்டு விழாவில் சின்மயி பாடிய முத்த மழை பாடல் பட்டி தொட்டியெங்கும் ஒலித்தது. அந்த அளவிற்கு அவரது குரல் ரசிகர்களை கட்டிப்போட்டது.

chinmayi

முன்னணி பின்னணி பாடகியாக திகழ்ந்து வந்த சின்மயி, பாடலாசிரியர் வைரமுத்துவின் மீது கடந்த 2018 ஆம் ஆண்டு பாலியல் குற்றச்சாட்டை முன்வைத்தார்.

தொடர்ந்து சினிமாவில் உள்ள டப்பிங் , பின்னணி பாடகர்கள் யூனியன் உள்ளிட்ட அனைத்து யூனியன்களில் பணியாற்ற சின்மயிக்கு தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில் விஜய் ஆண்டனி நடிப்பில் மார்கன் படம் உருவாகியுள்ளது.

40 விபத்துக்களை ஏற்படுத்திய அனுஷ்காவின் புகைப்படம் - ஷாக் தகவல்

40 விபத்துக்களை ஏற்படுத்திய அனுஷ்காவின் புகைப்படம் - ஷாக் தகவல்

விஜய் ஆண்டனி தகவல்

இந்தப் படம் வருகின்ற ஜூன் 27ல் வெளியாக உள்ள நிலையில், அதற்கான பிரமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வருகிறார். அப்போது பேசிய விஜய் ஆண்டனி,

vijay antony

நான் விரைவில் படங்களை இசையமைக்க உள்ளேன். அதில் கண்டிப்பாக சின்மயை பாட வைப்பேன் என்று கூறியுள்ளார். முன்னதாக ஏற்கனவே விஜய் ஆண்டனி இசையில் சின்மயி பாடியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.