விஜய் ஆண்டனி மகள் இறப்பிற்கான காரணம்..? மருத்துவர் சொன்ன ஷாக் தகவல்!
விஜய் ஆண்டனி மகள் தற்கொலைக்கு காரணம் குறித்து பிரபல மனநல மருத்துவர் ஒருவர் கூறியுள்ளார்.
தற்கொலை
தமிழ் திரையுலகில் பிரபல இசையமைப்பாளராகவும், பாடகராகவும் இருப்பவர் விஜய் ஆண்டனி. காதலில் விழுந்தேன், டிஸ்யூம், வேட்டைக்காரன், அங்காடித் தெரு உள்ளிட்ட படங்களுக்கு இசையமைத்து பிரபலமடைந்தார்.
அதுமட்டுமல்லாமல் நடிகராகவும் களமிறங்கி நான், காளி, பிச்சைக்காரன், சைத்தான் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். விஜய் ஆண்டனி தனது குடும்பத்தினருடன் சென்னை டிடிகே சாலையில் உள்ள வீட்டில் வசித்து வருகிறார். இவரது மகள் மீரா , சென்னை சர்ச் பார்க் பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த 19ம் தேதி அதிகாலை 3 மணியளவில் மீரா மின்விசிறியில் தூக்கு மாட்டிக்கொண்டு தற்கொலை செய்தார்.
இது திரையுலகிலும், ரசிகர்களிடையேயும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவரின் தற்கொலைக்கு மன அழுத்தமே காரணம் என்று கூறப்படுகிறது. அவரது உடல் ஓமந்தூரார் மருத்துவமனையில் உடற்கூறாய்வு செய்யப்பட்டு பின்னர் நல்லடக்கம் செய்யப்பட்டது.
மனநல மருத்துவர் பேட்டி
இந்நிலையில் மீராவின் இறப்பை அடுத்து, மனநல ஆலோசகர்களும் மருத்துவர்களும் தங்களது சமூக வலைதள பக்கங்களில் சில பதிவுகளை வெளியிட்டு வருகின்றனர். அந்த வகையில், மக்களிடையே பிரபலமான மனநல மருத்துவர் ஒருவர் சமீபத்தில் ஒரு நேர்காணலில் கலந்து கொண்டார்.
அப்போது அவர் விஜய் ஆண்டனியின் மகளின் மரணத்திற்கான காரணம் என்னவாக இருக்கும் என்பது குறித்து பேசியுள்ளார். அவர் பேசியதாவது "டீன் ஏஜில் இருக்கும் குழந்தைகள் பலருக்கு வீடுகளில் தனியாக அறை கொடுக்கப்படுவதாகவும் இதனால் அவர்களுக்கு குடும்பத்தினருடன் மனம் விட்டு பேசுவதற்காக வாய்ப்பு கிடைப்பதே இல்லை என்றும் கூறியிருக்கிறார்.
இதனால், அவர்களுக்கு என்ன நடந்தாலும் பெற்றோரிடம் தெரிவிப்பதில் சிரமம் ஏற்படுவதாகவும் இது, அவர்களை மன அழுத்தத்தில் கொண்டு சென்று விடுவதாகவும் கூறியுள்ளார். இவ்வாறு மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ள குழந்தைகளை தனி அறையில் விடக்கூடாது என்றும் அவர் பேசியுள்ளார். விஜய் ஆண்டனியின் மகள் விஷயத்திலும் இதுதான் நடந்திருப்பதாக அவர் கூறியுள்ளார்.