ஜீசஸ் கூட குடிச்சிருக்காரு... மது அனைவருக்கும் ஒன்று தான் - வாய் விட்ட விஜய் ஆண்டனி
பட விழாவில் நடிகர் விஜய் ஆண்டனி "ஜீசஸ் கூட குடிச்சிருக்காரு" என்று தெரிவித்த கருத்துக்கள் வைரலாகியுள்ளது.
விஜய் ஆண்டனி
தமிழ் சினிமாவில் எண்ணற்ற ஹிட் பாடல்களை கொடுத்தவர் விஜய் ஆண்டனி. இன்றளவும் அவரின் இசைக்கென தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. அது வெளிப்பாடு தான் அவர், அண்மையில் நடைபெற்ற அவர் இசை நிகழ்ச்சி கிடைத்த வரவேற்பு.
இசையமைப்பாளராக இருந்து திரையில் நாயகனாக முதல் முறை "நான்" படத்தில் அறிமுகமான அவர் முதல் படத்திலேயே நல்ல வரவேற்பையும், வெற்றியையும் பெற்றார். அதனை தொடர்ந்து சில படங்கள் நடித்தாலும், விஜய் ஆண்டனி என்ற நடிகர் பெரும் வரவேற்ப்பை பெற்றது "பிச்சைக்காரன்" படத்தில் தான்.
இயக்குனர் சசி இயக்கத்தில், விஜய் ஆண்டனி நடித்த இப்படம் மாறுபட்ட கதைக்களத்தில் அமைந்து சென்டிமெண்டாக ரசிகர்களை வெற்றி கொண்டது. தமிழ் மட்டுமின்றி தெலுங்கிலும் படம் பெரிய வெற்றியை பதிவு செய்தது.
தனிப்பட்ட வாழ்க்கையில் விபத்துக்கள், குழந்தை மரணம் என பெரும் சங்கடங்களை சந்தித்தாலும், பணியில் தீவிரமாக இருக்கின்றார் விஜய் ஆண்டனி. தற்போது இவர் நடிப்பில் "ரோமியோ" என்ற படத்தில் போஸ்டர் வெளியாகியது.
மிருணாளினி ரவி நாயகியாக நடித்துள்ள இப்படம் கோடை விடுமுறைக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. படத்தின் போஸ்டரில் முதல் இரவு அறையில் நடிகை மிருணாளினி கையில் மது பாட்டிலுடன் அமர்ந்திருந்தது இணையத்தில் வைரலானது.
ஜீசஸ் கூட குடிச்சிருக்காரு...
இது குறித்து படத்தின் நிகழ்ச்சியின் போது செய்தியாளர் கேள்வி கேட்க அதற்கு விஜய் ஆண்டனி அளித்த பதில் பெரும் சர்ச்சையாக மாறியுள்ளது. அவர் அளித்த பதில் வருமாறு,
இங்கு வந்திருப்பவர்களில் பாதி பேர் குடிப்பீர்கள் என நினைக்கிறேன். குடி என்றால் எல்லாருக்கும் ஒன்று தான், அதில் ஆண், பெண் வேறுபாடு பார்க்க வேண்டாம். அதை சரி என ஆதரிக்கவில்லை. ஆண் குடிப்பது தப்பு என்றால் பெண் குடிப்பதும் தப்பு தான் என்றார்.
மேலும், குடி என்பது நீண்ட நாட்களாகவே உள்ளது. சாராயம் என்ற பெயரில் இருந்தது இன்றைக்கு பார் வரை வந்துள்ளது. ஜீசஸ் கூட குடிச்சிருக்காரு. ராஜாக்கள் காலத்தில் சோமபானம் என்ற இருந்துள்ளது. குடி என்பது நீண்ட நாட்களாகவே உள்ளது.
இவ்வாறு விஜய் ஆண்டனி கூறினார். ஜீசஸ் பற்றி விஜய் ஆண்டனி தெரிவித்துள்ள கருத்துக்கள் தற்போது இணையத்தில் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது குறிப்பிடத்தக்கது.