Monday, Apr 7, 2025

இவ்வளவு அழகான பொண்ணு; 4-வது நாள் போன்லயே தாலி கட்டிட்டேன் - விஜய் ஆண்டனி!

Tamil Cinema Vijay Antony Actors Tamil Actors Tamil Actress
By Jiyath a year ago
Report

இசையமைப்பாளர் மற்றும் நடிகரான விஜய் ஆண்டனி தனது திருமணம் குறித்து பேசியுள்ளார்.

விஜய் ஆண்டனி

தமிழ் திரையுலகில் பிரபல இசையமைப்பாளராகவும், நடிகராகவும் இருப்பவர் விஜய் ஆண்டனி. முதன் முதல் 'சுக்ரன்' என்ற படத்தின் மூல தமிழ் திரையுலகில் இசையமைப்பாளராக அறிமுகமானார். காதலில் விழுந்தேன், டிஸ்யூம், வேட்டைக்காரன், அங்காடித் தெரு,உத்தம புத்திரன் உள்ளிட்ட பல படங்களுக்கு இசையமைத்து பிரபலமடைந்தார்.

இவ்வளவு அழகான பொண்ணு; 4-வது நாள் போன்லயே தாலி கட்டிட்டேன் - விஜய் ஆண்டனி! | Vijay Antony About His Marriage With Fatima

அதுமட்டுமல்லாமல் நடிகராகவும் களமிறங்கி நான், காளி, பிச்சைக்காரன், சைத்தான், கோடியில் ஒருவன், கொலை உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். கடைசியாக விஜய் ஆண்டனி நடிப்பில் ரோமியோ என்ற படம் வெளியானது.

இவர் கடந்த 2006-ம் ஆண்டு 'பாத்திமா' என்பவரை திருமணம் செய்து கொண்டார். நேர்காணல் ஒன்றில் கலந்து கொண்ட விஜய் ஆண்டனி தங்களது திருமணம் குறித்து பேசியுள்ளார்.

கணவருக்கு பல பேருடன் தொடர்பு; பணத்தேவை வேறு… நடிகை ரேஷ்மா கண்ணீர்!

கணவருக்கு பல பேருடன் தொடர்பு; பணத்தேவை வேறு… நடிகை ரேஷ்மா கண்ணீர்!

தாலி காட்டினேன்

அவர் கூறியதாவது "பாத்திமா, சன் டிவியில் தொகுப்பாளினியாக இருந்தார். நான் இசையமைத்த 'சுக்ரன்' படம் வெளிவந்த போது, பாத்திமா எனக்கு போன் செய்தார். அதில் 'உச்சி முதல்' என்ற பாடல் நன்றாக இருந்தது என்று கூறினார். எனக்கு அப்போது திருமண வயது.

இவ்வளவு அழகான பொண்ணு; 4-வது நாள் போன்லயே தாலி கட்டிட்டேன் - விஜய் ஆண்டனி! | Vijay Antony About His Marriage With Fatima

இவ்வளவு அழகான பெண் நம்மிடம் பேசுகிறார் என்பதை என்னால் நம்பவே முடியவில்லை. அப்போது நானும் "ஓ நம்மளும் பெரிய ஆள் தான் போலருக்கு" என்று நினைத்து அவரிடம் சந்தோஷமாக பேசிக்கொண்டிருந்தேன். முதல் போன் காலிலேயே 1 மணி நேரம் பேசினோம். பேசி முடிக்கும்போது அவரும் எனது பக்கத்து தெருவில்தான் இருக்கிறார் என்பதை தெரிந்து கொண்டேன்.

பின்னர் நாங்கள் நேரில் சந்தித்து பேசிய 3வது நாளே "உங்களுக்கு யாரவது மாப்பிள்ளை லிஸ்ட் இருந்தா, அதில் என் போரையும் சேர்த்துக்கோங்க" என்று சொல்லிவிட்டேன். பின்னர் அவரும் என்னிடம் பேச ஆரம்பித்தார். பேச தொடங்கிய 4வது நாள், செல்போனிலேயே தாலி காட்டினேன்" என்று பேசியுள்ளார்.