ஆதவ் மீது கோபத்தில் விஜய்: இப்படி பண்ணிட்டீங்களே?

Vijay Thamizhaga Vetri Kazhagam
By Fathima Mar 08, 2026 07:10 AM GMT
Report

எதிர்வரும் சட்டப்பேரவை தேர்தலில் நான்கு முனை போட்டி நிலவுகிறது, 20க்கும் மேற்பட்ட கட்சிகளுடன் கூட்டணி அமைத்துள்ள திமுக பலம் பொருந்திய கட்சியாக மாறியுள்ளது, வழக்கம் போல் நாம் தமிழர் தனித்து களமிறங்குகிறது.

இரு மாதங்களுக்கு முன்பாகவே கூட்டணிக்கு அழைப்பு விடுத்த தவெக-வுடன் எந்த கட்சியும் கூட்டணி அமைக்கவில்லை, ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு என தெரிவித்திருந்தாலும் எந்த கட்சியும் முன்வரவில்லை, இதனால் கடும் கோபத்தில் இருக்கிறாராம் விஜய்.

ஆட்சியில் பங்கு என்ற அறிவிப்பு காங்கிரஸ்- திமுக கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தியது, கடைசி வரையில் இழுபறியில் இருந்த காங்கிரஸ் கூட்டணியை வெற்றிகரமாக பேசி முடித்தார் முதலமைச்சர் முக ஸ்டாலின்.

ஆதவ் மீது கோபத்தில் விஜய்: இப்படி பண்ணிட்டீங்களே? | Vijay Angry With Aadhav Arjuna

தேசிய ஜனநாயக கூட்டணியில் இணையும் என எதிர்பார்க்கப்பட்ட தேமுதிக, திமுக-வுடன் கூட்டணி அமைத்துள்ளது, டிடிவி தினகரன் NDAவில் இணைந்துவிட்டார்.

தங்களுடன் கூட்டணி அமைப்பார்கள் என விஜய் எதிர்பார்த்த கட்சிகள் வராததால் கடும் அப்செட்டில் இருக்கிறாராம்.

ஆதவ் அர்ஜுனாவிடம் தன்னுடைய ஆதங்கத்தை வெளிப்படுத்தியதாக தவெக தரப்பிலிருந்து தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஏனெனில் கூட்டணி கட்சிகளை கொண்டு வர வேண்டும் என்ற பொறுப்பு அவரிடம் தான் ஒப்படைக்கப்பட்டதாம்.

ஆதவ் மீது கோபத்தில் விஜய்: இப்படி பண்ணிட்டீங்களே? | Vijay Angry With Aadhav Arjuna

ஆனால் இந்த விஷயத்தில் ஆதவ் ஈடுபாடு காட்டவில்லை என கூறப்படுகிறது, கட்சிகளின் தலைவர்கள் மறைமுகமாக அழைப்பு விடுத்தும் அதை கண்டுகொள்ளவில்லையாம்.

அவர்களை சரியாக அணுகாததே காரணமாம், சீனியர் கட்சி தலைவர்களுக்கு உரிய மரியாதையும் கொடுக்கவில்லை என கூறப்படுகிறது, இதுவே அவர்கள் மற்ற கட்சிகளுடன் கூட்டணி அமைக்க காரணமாகவும் அமைந்தது.

காங்கிரஸ்ஸை எப்படியும் இழுத்து போட்டுவிடலாம் என கணக்குப்போட்ட ஆதவ்-வுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

தமிழக தலைவர்களுடன் பேசாமல் நேரடியாக ராகுலை சந்திக்க முயன்றுள்ளார் ஆதவ், தவெகவுடன் கூட்டணி வைக்கலாம் என காங்கிரஸில் பேசப்பட்டாலும், ஒரு தரப்பினர் திமுக-வுடன் மட்டுமே கூட்டணி என கூறிவிட்டார்களாம், இதனால் இந்த முயற்சியும் தோல்வியில் முடிந்தது.

கடைசியில் தனி ஆளாக களமிறங்குகிறது தவெக, பொறுத்திருந்த பார்க்கலாம் மக்களின் முடிவுகளை!!

ஆதவ் மீது கோபத்தில் விஜய்: இப்படி பண்ணிட்டீங்களே? | Vijay Angry With Aadhav Arjuna