தேர்தலுக்கு இன்னும் 2நாட்கள் : மீண்டும் ஒரே வீட்டில் விஜய் - சங்கீதா!
தமிழக சட்டமன்ற தேர்தல் நாளை மறு தினம் 23ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில், நடிகரும் தவெக தலைவருமான விஜய் -சங்கீதா மீண்டும் இணைந்து வாழ முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இது விஜயின் அரசியல் வாழ்க்கைக்கு கூடுதல் பலம் சேர்க்கும் எனவும் குடும்பத் தலைவனாகத் தன்னை நிலைநிறுத்திக் கொள்வது, ஒரு மக்கள் தலைவனாக அவரை மக்கள் மனங்களில் இன்னும் ஆழமாகப் பதிய வைக்கும் என்றும் பொதுமக்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

தேர்தல் நெருங்கும் நிலையில், நேற்றைய தினம் விஜய் சங்கீதா விவாகரத்து வழக்கும் விசாரணைக்கு வந்தது.
விவாகரத்து முடிவில் மாற்றம்
ஆனால் தேர்தல் பணிகள் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை கருதில் கொண்டு விவாகரத்து வழக்கு ஜூன் 15 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
ஆனால் அதனை தொடர்ந்து இருவரும் சேர்ந்து வாழ முடிவெடுத்துள்ளதாகவும், விஜய் தனது அரசியல் பயணத்தின் அடுத்த இலக்காகக் கருதும் முதல்வர் பதவியேற்பு விழாவில் சங்கீதாவுடன் இணைந்து பங்கேற்கத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிய வருகின்றது.
முதல்வர் பதவியில் அமர்ந்தாலும் எம்எல்ஏ நாற்காலியில் அமர்ந்தாலும் இது சாத்தியம் என கூறப்படுகிறது.இது வெறும் தனிப்பட்ட விஷயம் மட்டுமல்ல, அவரது அரசியல் பிம்பத்திற்கும் ஒரு மிகப்பெரிய பலமாக அமையும் என அரசியல் விமர்சகர்கள் கருத்துகளை பதிவு செய்து வருகின்றனர்.