அண்ணா வெளியே வாங்க - நடிகர் விஜய் வீட்டில் குவிந்த ரசிகர்கள்!
நடிகர் விஜய்யின் 47வது பிறந்த நாளை முன்னிட்டு பரிசு பொருட்களுடன் நடிகர் விஜய் வீட்டின் முன்பு ரசிகர்கள் அலைமோதினர்.
நடிகர் விஜய்யின் 47வது பிறந்தநாளான இன்று விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்து கூறுவதற்காக நூற்றுக்கும் மேற்பட்ட ரசிகர்கள் அதிகாலை முதலே விஜய் வீட்டின் முன்பு காத்திருந்தனர்.

சென்னை நீலாங்கரை கேஷ்சுரினா டிரைவ் சாலையில் அமைந்துள்ள விஜய் வீட்டின் முன்பு குவிந்துள்ள ரசிகர்கள் விஜய் அண்ணா.. வெளியில் வாருங்கள்.. என கோஷம் எழுப்பினர்.
பெண் ரசிகைகள் சிலர் பரிசுப் பொருட்களுடன் விஜய் வீட்டின் முன்பு பல மணி நேரமாக காத்திருந்தனர். இதனிடையே விஜய் வீட்டுக்கு வருகை தந்த காஞ்சிபுரம் மாவட்ட மக்கள் இயக்க பொறுப்பாளர் சரவணன் நடிகர் விஜய் ,வீட்டில் இல்லை என்று கூறி ரசிகர்களை களைந்து செல்லுமாறு கூறினார்.

இதனைத் தொடர்ந்து காலை முதல் காத்திருந்த ரசிகர்கள், வாங்கி வந்திருந்த கேக்கை விஜய் வீட்டு வாசலில் வைத்து வெட்டி களைந்து சென்றனர்.
மேலும் சிலர், விஜய் வீட்டு வாசலில் இருந்து செல்ல மனமில்லாமல் அங்கேயே காத்திருக்கின்றனர்.