நான் அரசியலுக்கு வரப்போவதில்லை; எனக்கு அரசியல்னா என்னன்னே தெரியாது - மாற்றி பேசும் விஜய்!
ரசிகை ஒருவரின் அரசியல் குறித்த கேள்விக்கு விஜய் பதிலளித்துள்ளார்.
நடிகர் விஜய்
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் "லியோ" படம் வரும் அக்டோபர் 19-ஆம் தேதி வெளியீட்டிற்காக தயாராகி வருகிறது. இதனை தொடர்ந்து விஜய் தன் 68-வது படத்தில் இயக்குனர் வெங்கட் பிரபுவுடன் இணையவுள்ளார்.
படத்தின் முதற்கட்ட வேலைகள் துவங்கி இருக்கும் நிலையில், படத்தின் படப்பிடிப்பு வரும் அக்டோபர் மாதம் துவங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சூழ்நிலையில் தான் தற்போது விஜய் அரசியலில் கால் பதிக்கவுள்ளார் என்ற செய்திகள் வேகமாக பரவி வருகின்றது.அதனை உறுதிப்படுத்தும் வகையில் விஜயும், அண்மையில் கல்வி விழா ஒன்று நடத்தியது மட்டுமின்றி அதில் அரசியலும் பேசி, அந்த கருத்துக்களுக்கு வலு சேர்த்தார்.
மேலும், விஜய் மக்கள் இயக்கம் சார்பில் இரவு பாட சாலை ஒன்று அண்மையில் துவங்கப்பட்டது. இப்படியாக விஜய்யின் அரசியல் வருகைக்கான வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
அரசியலுக்கு வரமாட்டேன்
கடந்த 26 வருடங்களுக்கு முன் ஈரோடு மாவட்டத்தில் விஜய் ரசிகர்கள் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் விஜய் கலந்து கொண்டு பேசியிருப்பார். அப்போது பெண் ரசிகர்கள் அவரிடம் பல கேள்விகள் கேட்டனர். அதற்கு விஜய்யும் சிரித்த்தபடியே பதிலளித்தார்.
அந்த நிகழ்ச்சியில் ரசிகை ஒருவர் 'உங்கள் சினிமா துறையில் இருந்து நிறைய பேர் அரசியலுக்கு வந்திருக்கிறார்கள் , உங்கள் அப்பா கூட அரசியல் சம்பந்தப்பட்ட வெற்றிப்படங்கள் கொடுத்திருக்கிறார். உங்கள் எதிர்காலத்தில் நீங்கள் அரசியலுக்கு வருவீர்களா? அந்த எண்ணம் உங்களுக்கு இருக்கிறதா? என்று கேள்வி கேட்டார்.
அதற்கு பதிலளித்த விஜய் "நிச்சயமாக இல்லை, எனக்கு அரசியல்னா என்னன்னே தெரியாது. கண்டிப்பாக அரசியலுக்கு நான் வரமாட்டேன் என்று பதிலளித்தார்.