தொடரும் விமர்சனம்..தளபதி 69 படத்தை கைவிடும் விஜய்??அதிர்ச்சி பின்னணி
நடிகர் விஜய் நடிப்பில் தற்போது "G.O.A.T" படம் தயாராகி வருகின்றது.
விஜய்
தமிழ் மட்டுமின்றி தென்னிந்திய திரையில் பெரும் ஆதிக்கம் செலுத்தும் நடிகராக இருக்கும் விஜய்யின் அரசியல் ஆசைகள் அவ்வப்போது வெளிப்பட்டு வந்தது. ரஜினியை எதிர்த்தவர்கள், விஜயும் அதே போல பின்வாங்குவார் என்றே கருதினார்கள்.

ஆனால், கடந்த பிப்ரவரி 2-ஆம் தேதி தமிழக வெற்றிக் கழகத்தை துவங்கினார். தற்போது நடித்து வரும் "G.O.A.T" படத்திற்கு பிறகு மேலும் ஒரு படம் மட்டுமே நடிப்பேன் என அறிவித்திருக்கும் விஜய், அதன் பிறகு முழுநேர அரசியல்வாதியாக மாறி பணிபுரியவுள்ளதாக அறிக்கையும் வெளியிட்டார்.
தளபதி 69
தளபதி 69 என குறிப்பிடப்படும் அந்த கடைசி படம் குறித்து அவ்வப்போது பேச்சுக்கள் எழுந்து வருகின்றன. அரசியல் படமாகவே அமையும், இவர் தான் இயக்குனர் என்றெல்லாம் பல செய்திகள் வெளிவந்தன.
ஆனால், எதுவும் அதிகாரபூர்வமாகவில்லை. அதே நேரத்தில், கட்சி பணியில் முனைப்பு காட்டும் விஜய் மீது காரசாரமான விமர்சனங்கள் எழுந்துள்ளன. அவர் தொடர்ந்து வாழ்த்து தெரிவித்து வருவதால், இது தமிழக வெற்றிக் கழக'மல்ல - தமிழக வாழ்த்து கழகம் என்றெல்லாம் பலரும் விமர்சிக்கிறார்கள். இந்த மாதம் விஜயின் பிறந்தநாள் வருகின்றது.

அப்போது 69-வது படத்தின் அறிவிப்பு ஏதேனும் வருமா? என ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர். 
அவர்களுக்கு அதிர்ச்சி கொடுக்கும் வகையில், படத்தை தயாரிப்பதாக இருந்த தயாரிப்பு நிறுவனம் பின்வாங்கியதாக கூறப்படுகிறது. அதனால் படத்தை துவங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது என்ற தகவல்கள் வெளிவருகின்றன.
 
                     
                                                 
         
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
    