முதலமைச்சர் ஸ்டாலினை திருமணத்துக்கு அழைத்த விக்னேஷ் சிவன் - நயன் ஜோடி
நடிகை நயன்தாரா மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் இருவரும் கடந்த 6 ஆண்டுகளாக காதலித்து வருவதை நாம் அறிவோம்.
இவர்கள் இருவரும் வருகிற ஜூன் 9ஆம் தேதி மகாபலிபுரத்தில் திருமணம் செய்துகொள்ளவுள்ளனர். தங்களது திருமணத்திற்காக சில முக்கியமான நட்சத்திரங்களுக்கு மட்டுமே அழைப்பிதழ் வைத்துள்ளனர்.
ஜூன் 8ஆம் தேதி நடைபெறும் திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு 30 பிரபலங்கள் உட்பட சுமார் 200 பேரை மட்டுமே அழைக்க திட்டமிட்டுள்ளனர். ரஜினிகாந்த், விஜய், அஜித், சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி ஆகியோரும் அந்தப் பட்டியலில் இடம்பெற்றிருப்பதாகக் கூறப்படுகிறது.
மறுநாள் அதிகாலை 4.30 முதல் 6 மணிக்குள் நடக்கும் தங்கள் திருமணத்திற்கு குறிப்பிட்ட நபர்களை மட்டுமே நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் அழைத்துள்ள்னர்.
இந்நிலையில், இன்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களை நேரில் சந்தித்து நடிகை நயன்தாரா, விக்னேஷ் சிவன் தங்கள் திருமணத்திற்கு அழைப்பிதழ் கொடுத்துள்ளனர். இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகிவருகிறது.