கணவர் விக்னேஷ் சிவன் தலையில் துண்டை போட வைத்த நடிகை நயன்தாரா
நடிகை நயன்தாராவும், இயக்குநர் விக்னேஷ் சிவனும் 7 வருடங்களாக காதலித்து வந்த நிலையில், கடந்த வருடம் திருமணம் செய்து கொண்டனர். அதற்கு முன்பு அவர்கள் பதிவு திருமணம் செய்து கொண்டதாகவும் தகவல்கள் வெளியானது.
ஏகே 62 படத்தில் இருந்து நீக்கப்பட்ட விக்னேஷ் சிவன்
இதையடுத்து இரட்டை குழந்தைகள் விவகாரம் பெரும் சர்ச்சையாக வெடித்த நிலையில் இருவரும் திருமணத்திற்கு முன்பு பதிவு திருமணம் செய்து கொண்டது தெரியவந்தது.
இது போன்ற சர்ச்சைகள் எல்லாம் சற்று ஓய்ந்த நிலையில், விக்னேஷ் சிவன் அஜித்தை வைத்து AK62 திரைப்படம் எடுக்க உள்ளதாக தகவல் வெளியானது.
இதற்கான நடிகர், நடிகைகள் தேர்வு செய்யும் பணிகளிலும் விக்னேஷ் சிவன் ஈடுபட்டு வந்தார். அதன்படி வில்லனாக அரவிந்த் சாமி நடிக்க ஒப்பந்தமாகி இருந்தார். அதோடு நகைச்சுவை நடிகர் சந்தானமும் இப்படத்தில் நடிக்க உள்ளதாகவும் தகவல் வெளியானது.
இதற்கான நடிகர், நடிகைகள் தேர்வு செய்யும் பணிகளிலும் விக்னேஷ் சிவன் ஈடுபட்டு வந்தார். அதன்படி வில்லனாக அரவிந்த் சாமி நடிக்க ஒப்பந்தமாகி இருந்தார்.
அதோடு நகைச்சுவை நடிகர் சந்தானமும் இப்படத்தில் நடிக்க உள்ளதாகவும் தகவல் வெளியானது. இப்படி படு ஜோராக நடைபெற்று வந்த ஏகே 62 பணிகள் கடந்த மாத இறுதியில் நிறுத்தப்பட்டு அப்படத்தில் இருந்து விக்னேஷ் சிவன் அதிரடியாக நீக்கப்பட்டார்.
நயன்தாரா தான் காரணம்?
விக்னேஷ் சிவனுக்கு பதில் மகிழ் திருமேனி தற்போது ஒப்பந்தம் ஆகி உள்ளார். இதற்கு காரணமாக அவரை படத்தில் இருந்து நீக்கப்பட்டதாக கூறப்பட்ட நிலையில் தற்போது இன்னொரு தகவலும் பரவி வருகிறது.
ஏகே 62 படத்தில் இருந்து விக்னேஷ் சிவன் நீக்கப்பட்டதற்கு அவரது மனைவியும் நடிகையுமான நயன்தாரா தான் காரணம் என்று தகவல் வெளியாகியுள்ளது.
அப்படத்தில் அஜித்துடன் நடிகை நயன்தாராவை நடிக்க வைக்க வேண்டும் என்று விக்னேஷ் சிவன் முடிவு செய்திருந்தார்.
இதை ஏற்றுக்கொள்ளாத லைகா நிறுவனம் அஜித்துக்கு ஜோடியாக திரிஷாவை நடிக்க வைக்க சொல்லியுள்ளனர்.
இதற்கு விக்னேஷ் சிவன் த்ரிஷாவை நடிக்க வைக்க மறுப்பு தெரிவித்துள்ளார். கடைசி நேரத்தில் பாலிவுட் நடிகை ஒருவரை ஒப்பந்தம் செய்யும் நேரத்தில் அவரையும் வேண்டாம் என்று கூறிவிட்டாராம்.
இதனால் கோபமடைந்த லைகா நிறுவனம் மற்றும் அஜித் தரப்பு விக்கியை நீக்கியுள்ளனர். இந்த முடிவுக்கு நயன்தாராவின் பிடிவாதம் தான் காரணம் என விக்னேஷ் சிவன் புலம்பி வருகிறாராம்.