மனைவியின் முன்னாள் காதலன்; இந்த விசயத்துல சிம்புக்குதான் நன்றி - விக்னேஷ் சிவன் உருக்கம்

Silambarasan Nayanthara Vignesh Shivan
By Sumathi Apr 22, 2023 05:40 AM GMT
Report

சிம்புவை, விக்னேஷ் சிவன் வெளிப்படையாக பாராட்டியுள்ள சம்பவம் வைரலாகி வருகிறது.

விக்னேஷ் சிவன்

விக்னேஷ் சிவன் இயக்குநராக அறிமுகமான முதல் திரைப்படம் போடா போடி. இதனைத் தொடர்ந்து வெளியான நானும் ரவுடி தான் திரைப்படம் தான் அவருக்கான அடையாளத்தை கொடுத்தது. அதில், இயக்குநராக மட்டும் இல்லாமல், 3 பாடல்களையும் எழுதியிருந்தார்.

மனைவியின் முன்னாள் காதலன்; இந்த விசயத்துல சிம்புக்குதான் நன்றி - விக்னேஷ் சிவன் உருக்கம் | Vignesh Shivan Thanked Simbu

அதனைத் தொடர்ந்து வணக்கம் சென்னை, என்னை அறிந்தால், மாரி, ரெமோ, விக்ரம் வேதா, மாஸ்டர், வலிமை, டான் என பல படங்களில் பாடல்கள் எழுதியுள்ளார்.

 பாராட்டு

அப்போது தான் நயன்தாராவுடன் காதல் ஏற்பட்டு திருமணமும் செய்துக்கொண்டார். சிம்புவும் விக்னேஷ் சிவனும் ஒரே பள்ளியில் படித்தவர்கள். அப்போது ஏற்பட்ட நட்பில் தான் போடா போடி படத்தில் கமிட் ஆகியுள்ளார் சிம்பு.

மனைவியின் முன்னாள் காதலன்; இந்த விசயத்துல சிம்புக்குதான் நன்றி - விக்னேஷ் சிவன் உருக்கம் | Vignesh Shivan Thanked Simbu

அதில் தான், படங்களுக்கும் பாடல்கள் எழுத வேண்டியது தானே என விக்னேஷ் சிவனிடம், சிம்பு கூறியுள்ளார். அப்படி உருவான ஆர்வம் தான் இன்று தன்னை ஒரு பாடலாசிரியராக கொண்டு வந்துள்ளது. இதற்கு முழு காரணமும் சிம்பு தான் என பாரட்டியுள்ளார்.