விஜயின் ஜனநாயகன் லீக் விவகாரம்... விக்னேஷ் சிவன் சொன்ன தகவல்!

Vijay Tamil Cinema Vignesh Shivan JanaNayagan TVK
By Vinoja Apr 16, 2026 06:00 AM GMT
Report

LIK திரைப்படம் குறித்து, இயக்குநர் விக்னேஷ் சிவன் வழங்கிய பேட்டியில் ஜனாயகன் திரைப்பட லீக் தொடர்பில் கருத்து தெரிவித்துள்ளார்.

பிரதீப் ரங்கநாதன் மற்றும் இயக்குநர் விக்னேஷ் சிவன் கூட்டணியில் உருவான ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ (LIK) திரைப்படம், கடந்த ஏப்ரல் 10 ஆம் திகதி திரைக்கு வந்து, வெற்றிநடை போட்டு வருகின்றது.

விஜயின் ஜனநாயகன் லீக் விவகாரம்... விக்னேஷ் சிவன் சொன்ன தகவல்! | Vignesh Shivan Talk About Jana Nayagan Leak

LIK திரைப்படம் குறித்து, இயக்குநர் விக்னேஷ் சிவன் ஊடகமொன்றிற்கு வழங்கிய பேட்டியில் ஜனநாயகன் படம் இணையத்தில் கசிந்தது குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.

குறித்த பேட்டியில் அவர் குறிப்பிடுகையில், "எல்.ஐ.கே. படத்தில் பணியாற்றிய படத்தொகுப்பாளர் பிரதீப் ராகவ் தான் ஜன நாயகன் படத்திற்கும் படத்தொகுப்பாளராக பணியாற்றினார்.

நான் அவரிடம் பேசினேன். ஆனால், ஜன நாயகன் கசிவுக்குப் பின்னால் யார் இருக்கிறார்கள் என்பது யாருக்குமே தெரியவில்லை. பிரதீப் தொழில் விடயத்தில் மிகுந்த அர்பணிப்பு கொண்டவர்.

அவர் எனக்கு எல்.ஐ.கே. படத்தின் சில காட்சிகளை அனுப்ப விரும்பினால்கூட, அவற்றில் முறையாக 'வாட்டர்மார்க்' இட்டு,கடவுச்சொல் (password) மூலம் பாதுகாக்கப்பட்ட நிலையிலேயே அனுப்புவார்.

நான் சில மணிநேரங்களுக்குப் பிறகு அதைத் திறந்து பார்த்தால், அதன் அணுகல் காலாவதியாகிவிடும். எனவே, படத்தொகுப்பாளர் தரப்பில் தவறு நிகழ்ந்திருக்கும் என நான் கருதவில்லை என தெரிவித்துள்ளார்.