'வலி இல்லாமல் காதல் இல்லை, அது ரொம்பவும் வேதனையானது..ஆனால்’ - விக்னேஷ் சிவன் ஓப்பன் டாக்
வலி இல்லாமல் லவ் இல்லை என இயக்குனர் விக்னேஷ் சிவன் தெரிவித்துள்ளார்.
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நயன்தாரா, விஜய் சேதுபதி, சமந்தா உள்ளிட்டோர் நடித்து ரிலீஸுக்கு தயாரக இருக்கும் படம் காத்து வாக்குல ரெண்டு காதல்.
வருகிற ஏப்ரல் 28-ம் தேதி வெளியாகவிருக்கும் இந்த படத்தை இயக்கியும், நயன்தாராவுடன் சேர்ந்தும் தயாரித்து இருக்கிறார் விக்னேஷ் சிவன்.
இந்நிலையில் படம் குறித்து தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில், “படம் இயக்குவதன் சிறப்பான அனுபவமே கடைசி 5 நாட்கள் தான். அனிருத்துடன் சேர்ந்து காட்சிகளை பார்த்தேன். இந்த நாட்களுக்காக தான் வாழ்கிறேன்.
என்னுடைய லவ், என் பேபியுடன்(நயன்தாரா) கடைசி 5 நாட்கள். இந்த படத்திற்காக அதிகமாக உழைத்திருக்கிறோம். அதனால் பட வேலை முடியும்போது வரும் வலி ஏற்கனவே துவங்கிவிட்டது.
அது சிறிது வேதனையானதும் கூட. ஆனால் வலி இல்லாமல் லவ் இல்லை என்பதால் அந்த வலிகள் ஓகே என்று” விக்னேஷ் சிவன் உருக்கமாக தெரிவித்துள்ளார்.