கையில் இரட்டை குழந்தைகளை வைத்து கொண்டு நயன்தாராவுடன் ரொமான்ஸ் செய்த விக்னேஷ் சிவன்
கையில் இரட்டை குழந்தைகளுடன் தீபாவளி வாழ்த்து கூறிய போது நயன்தாராவுக்கு விக்னேஷ் சிவன் முத்தம் கொடுத்த காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
காதல் திருமணம்
கடந்த 2015ம் ஆண்டு ‘நானும் ரவுடிதான்’ படத்தில் நயன்தாரா நடித்தார். இந்த படத்தை விக்னேஷ் சிவன் இயக்கினார்.இந்த படத்தின் படப்பிடிப்பில்தான் நயன்தாராவுக்கும் விக்னேஷ் சிவனுக்கும் இடையே காதல் மலர்ந்தது.
கடந்த 7 வருடமாக காதலித்து வந்த இவர்கள், லிவிங் டு கெதர் முறையில் வாழ்ந்து வந்தனர். இந்த ஆண்டு ஜூன் 9ம் தேதி மாமல்லபுரத்தில் உள்ள ஒரு ரிசார்ட்டில் திருமணம் செய்துகொண்டனர்.
இரட்டை குழந்தை விவகாரம்
தம்பதிக்கு இரட்டை குழந்தை திருமணமாகி 4 மாதங்களே ஆன நிலையில் திடீரென கடந்த 9ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) மாலை, தங்களுக்கு இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்திருப்பதாக விக்னேஷ் சிவன் டிவிட்டரில் தெரிவித்தார்.

இந்த தகவல் ரசிகர்களுக்கும் திரையுலகினருக்கும் அதிர்ச்சியை கொடுத்தது. இது தொடர்பாக விசாரித்ததில், வாடகை தாய் மூலம் நயன்தாரா குழந்தை பெற்றிருப்பது தெரிய வந்தது.
தீபாவளி வாழ்த்து
இந்த நிலையில் நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது.நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவரும் கையில் குழந்தைகளுடன் தீபாவளி வாழ்த்து தெரிவித்தனர்.

வாழ்த்து சொல்லும் போது நயன்தாராவுக்கு விக்னேஷ் சிவன் முத்தம் கொடுத்தார் தற்போது இந்த வீடியோ காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது
தாலி கட்டுறேனு சொல்லி 1000 முத்தங்கள்.. பிக்பாஸ் முத்துக்குமரன் மீது பெண் பரபரப்பு குற்றச்சாட்டு! Manithan
மரண தண்டனையை இரத்து செய்ய அழுத்தம் ...! அனோஜன் மீது நடந்த தாக்குதல்: சிறைக்கு விரையும் தூதுவர் IBC Tamil