நயன்தாரா - விக்னேஷ் சிவன் திருமணத்தில் முக்கிய நபருக்கு அழைப்பில்லை - அதிர்ச்சி தகவல்
நடிகை நயன்தாரா - இயக்குநர் விக்னேஷ் சிவன் திருமணத்தில் குடும்ப உறுப்பினர் ஒருவர் அழைக்கப்படவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக உள்ள நயன்தாரா நானும் ரௌடி தான் படத்தில் நடித்த போது அப்படத்தின் இயக்குநரான விக்னேஷ் சிவனுடன் காதலில் விழுந்தார். 6 வருடங்களை கடந்துள்ள இந்த காதல் எப்போது திருமணத்தில் முடியும் என ரசிகர்கள் பலரும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
இதனிடையே நெற்றிக்கண் படத்தின் புரமோஷனுக்காக விஜய் டிவியில் தொகுப்பாளர் டிடிக்கு அளித்த பேட்டியில் தனக்கும் விக்னேஷ் சிவனுக்கும் நிச்சயதார்த்தம் ஆகிவிட்டதாக நயன்தாரா தெரிவித்து இருந்தார். இதனால் இந்தாண்டு அவர் திருமணம் செய்வார் என கூறப்பட்டது. சமீபத்தில் சில தினங்களுக்கு முன்பு விக்னேஷ் சிவன் இயக்கத்தில் காத்து வாக்குல ரெண்டு காதல் படம் ரிலீசானது.
படத்தின் ரிலீசை தொடர்ந்து கோயில்களில் சாமி தரிசனம் செய்து வந்த நிலையில் திருப்பதிக்கும் சென்றிருந்தனர். அங்கு தங்களது திருமண ஏற்பாடுகளை அவர்கள் பார்வையிட்டதாக கூறப்படுகிறது. மேலும் வரும் ஜூன் 9ம் தேதி இவர்கள் இருவருக்கும் திருப்பதியில் திருமணம் நடைபெறவுள்ளதாக தகவல்கள் வெளியானது.
இந்நிலையில் இந்த திருமணத்திற்கு இயக்குநர் விக்னேஷ் சிவனின் பெரியப்பா ஒருவருக்கு அழைப்பு விடுக்கவில்லை என்ற தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவரின் பெரியப்பா மாணிக்கம் தான் சமீபத்தில் ஒரு பேட்டியில் இதனை தெரிவித்துள்ளார்.
இயக்குநர் விக்னேஷ் சிவனின் அப்பா சிவக்கொழுந்து மற்றும் அம்மா மீனாகுமாரி ஆகிய இருவரும் 1970களிலேயே சொந்த கிராமத்தை விட்டு சென்னைக்கு வந்துவிட்டதாகவும், நீண்ட நாட்களாக இருகுடும்பத்திற்கும் இடையே பேச்சுவார்த்தை இல்லை என்றும் கூறியுள்ளார். லால்குடியை சேர்ந்த மாணிக்கம் விக்னேஷ் சிவனின் சகோதரி திருமணத்திற்கும் அழைப்பு விடுக்கவில்லை என்றும், இப்போதும் அவர்கள் தங்களை அழைக்கவில்லை என்று வருத்தப்பட்டுள்ளார்.
தங்களுக்கு குழந்தைகள் இல்லை என்றும், விக்னேஷ் சிவன் மற்றும் அவரது சகோதரி ஐஸ்வர்யாவைத் தான் தனது குழந்தைகளாக நினைத்து வந்ததாகவும் அவர்கள் தன்னை ஒதுக்குவதாகவும் மாணிக்கம் கூறியுள்ளார். ஆனால் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா எங்கே இருந்தாலும் நல்லா இருக்கணும் என்று தனது வாழ்த்துக்களை அவர் தெரிவித்துள்ளார்.