படம் சக்சஸ் ஆனதும் சொகுசு கார் வாங்கிய விக்னேஷ் சிவன் - எவ்வளவு விலைன்னு தெரியுமா? இதோ
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா ஆகியோர் நடிப்பில் ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ படம் தமிழகம் முழுவதும் வெளியாகியுள்ளது. இப்படத்தில், கதிஜாவாக சமந்தாவும், கண்மணியாக நயன்தாராவும், சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்கள். இப்படத்தில் இருவரையும் காதலிப்பவராக விஜய் சேதுபதி நடித்துள்ளார்.
வெளியானதையடுத்து நயன்தாரா, தனது காதலர் விக்னேஷ் சிவனுடன் திருப்பதி கோவிலுக்கு சென்றனர். அங்கு எடுத்துக்கொண்ட புகைப்படத்தை விக்னேஷ் சிவன் சமூக வலைத்தளத்தில் பகிர்ந்தார். அந்தப் புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாக பரவியது.
வெளியான முதல் நாளே சென்னை பாக்ஸ் ஆபிஸில், சென்னையில் மட்டும் ரூ. 66 லட்சத்தை தாண்டி வசூலை ‘காத்து வாக்குல இரண்டு காதல்’ படம் பெற்றுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
இதனால், நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் மகிழ்ச்சியில் துள்ளி குதித்துள்ளனர். படத்தின் வெற்றியால் மிகுந்த உற்சாகத்தில் இருக்கும் விக்னேஷ் சிவன் தற்போது விலையுயர்ந்த ஃபெராரி கார் ஒன்றை வாங்கி இருக்கிறார். அந்த காரை ஓட்டும் போது எடுத்த புகைப்படங்களையும், வீடியோவையும் பதிவிட்டு தன்னுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்தி இருக்கிறார்.
தனது போன் கவரில் கூட ஃபெராரி கார் சின்னம் தான் இருக்கும். அந்த அளவுக்கு இந்த காரின் மீது ஆசை வைத்திருந்ததாகவும், தற்போது அந்த காரை வாங்கி உள்ளது மிகுந்த சந்தோஷத்தை தருவதாகவும் விக்கி தெரிவித்துள்ளார். இந்த காரின் விலை ரூ.6 கோடி என்பது குறிப்பிடத்தக்கது.