6 மணிநேரம் காக்கவைப்பு; சாப்பாடு கூட தரல - மீண்டும் சர்ச்சையில் சிக்கிய விக்கி-நயன்!

Nayanthara Tamil Cinema Madurai Vignesh Shivan
By Sumathi Jan 20, 2025 05:01 AM GMT
Report

திருமண வீடியோ விவகாரத்திற்கு பின் விக்னேஷ் சிவன் - நயன்தாரா தம்பதி மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளனர்.

 femi 9 

மதுரையில் உள்ள தனியார் மண்டபத்தில் femi 9 நாப்கின் நிறுவன நிகழ்வு நடைபெற்றது. இதில் நடிகை நயன்தாரா மற்றும் அவரது கணவர் விக்னேஷ் சிவன் ஆகியோர் பங்கேற்று விற்பனையை அதிகரித்த முகவர்களுக்கான பரிசுகளை வழங்கினர்.

nayanthara - vignesh shivan

மேலும் social media influencers சிலரும் பங்கேற்றனர். இந்நிலையில் இந்நிகழ்ச்சி குறித்து adipoli foodie என்ற influencer வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார்.

யார் என்ன சொன்னால் என்ன? விஜய் எனக்கு அப்படித்தான் - த்ரிஷா ஓபன்டாக்!

யார் என்ன சொன்னால் என்ன? விஜய் எனக்கு அப்படித்தான் - த்ரிஷா ஓபன்டாக்!

வெடித்த சர்ச்சை

அதில், “காலை 9 மணிக்கு வருவதாக சொல்லி நயன்தாரா மாலை 3 மணிக்கு வந்தார். 1 மணிக்கு முடிவதாக கூறப்பட்ட நிகழ்ச்சி 6 மணிக்கு முடிந்தது. இதனால் வந்தவர்கள் பலர் தங்களது பஸ், ட்ரெயினை மிஸ் செய்தனர்.

காத்திருந்தவர்களுக்கு உணவு கூட தரவில்லை. நயன்தாரா யாரையும் மதிக்கவில்லை” என கூறியுள்ளார். ஓரிரு நாட்களில் அவரது சமூக வலைதள பக்கத்தில் இருந்து நீக்கப்பட்டது.

Copyright காரணம் கூறி நயன்தாரா தரப்பு இந்த வீடியோவை நீக்கவைத்துள்ளனர். அதற்கு பதிலாக பணம் தருவதாக பேரம் பேசியதாகவும் அவர் விளக்கமளித்துள்ளார். இவ்வாறு அவர் பேசியது சர்ச்சையாக வெடித்துள்ளது.