விக்கிக்கு மீண்டும் திருமணம் நடக்கும்: விக்கியின் பெரியம்மா ஆதங்கம்!

Nayanthara Chennai Vignesh Shivan Married
By Sumathi Jun 09, 2022 03:49 PM GMT
Report

விக்னேஷ் சிவன் நயன்தாரா திருமணம் திரும்ப நடக்கும் என விக்னேஷ் சிவனை தூக்கி வளர்த்த அவரின் பெரியம்மா ஆதங்கத்துடன் தெரிவித்துள்ளார்.

விக்னேஷ் சிவன் நயன்தாரா திருமணம்

திருச்சி மாவட்டம் லால்குடி விக்னேஷ் சிவன் நயன்தாரா திருமண விழாவிற்கு அழைப்பிதழ் இல்லாததால் சொந்த பெரியப்பாவும் பெரியம்மாவும் மனவருத்தத்தில் உள்ளனர்.

விக்கிக்கு மீண்டும் திருமணம் நடக்கும்: விக்கியின் பெரியம்மா ஆதங்கம்! | Vignesh Shivan Mother Press Meet

திரும்பத் திரும்ப நடைபெறும்

இதுகுறித்து விக்னேஷ் சிவனின் பெரியப்பா மாணிக்கம் கூறுகையில், விக்னேஷ் சிவன் பெரியவர்களை கலந்து ஆலோசித்து இந்த திருமண ஏற்பாடுகளை செய்யாதது எனக்கும் எனது மனைவிக்கும் மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்தியது.

விக்கிக்கு மீண்டும் திருமணம் நடக்கும்: விக்கியின் பெரியம்மா ஆதங்கம்! | Vignesh Shivan Mother Press Meet

மேலும் 9 -10.30 AM திருமண நேரம் என்பது குளிகை நேரம் குளிகை நேரத்தில் திருமணம் மற்றும் வீட்டில் எந்த ஒரு நிகழ்ச்சி நடந்தாலும் அது திரும்பத் திரும்ப நடைபெறும் என்பது ஐதிகம்.

இந்த மாதிரி வீட்டில் நடக்கும் முதல் திருமண நிகழ்ச்சியில் எங்கள் குடும்பத்தில் 11 பேர் வாரிசுகள் உள்ளனர். அவர்கள் யாரையும் கலந்து கொள்ளாமல் நடத்தப்படுவது எங்கள் குடும்பத்திற்கு மிகுந்த மன உளைச்சலையும் வருத்தத்தை ஏற்படுத்துகிறது என கூறினார்