நீங்கள் ஒரு மேதை - டுவிட்டரில் ஷியாமக் தாவரை வாழ்த்திய விக்னேஷ் சிவன்...!

Twitter Chess Vignesh Shivan 44th Chess Olympiad
By Nandhini Aug 20, 2022 10:28 AM GMT
Report

ஒலிம்பியாட்டில் பங்கேற்க கலைஞர்களுக்கு விக்னேஷ் சிவன் டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார். 

44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி மாமல்லபுரம் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள போர் பாயிண்ட்ஸ் ஷெரட்டன் ரிசார்ட்டல் கடந்த 28ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 10ம் தேதியோடு முடிவடைந்தது.

செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழா

செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவில் செஸ் ஒலிம்பியாட் ஜோதியை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் வழங்கினார் விஸ்வநாதன் ஆனந்த். அதன் பின்னர், பிரதமர் மோடியிடம் செஸ் ஒலிம்பியாட் ஜோதியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

இதனையடுத்து, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை நிகழ்த்தினார். இதன் பின்பு, பிரதமர் மோடி உரை நிகழ்த்துகையில், வணக்கம் என்று தமிழில் கூறி உரையை தொடங்கினார். அப்போது அவர் பேசுகையில், சிறப்பான ஒரு தருணத்தில் செஸ் ஒலிம்பியாட் போட்டி இந்தியாவிற்கு வந்துள்ளது. இருந்தோம்பி என்ற திருக்குறளை மேற்கோள் காட்டி பேசினார்.

44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி

செஸ் ஒலிம்பியாட்டில் பங்கேற்க 187 நாடுகளில் இருந்து 2000-க்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் மாமல்லபுரத்தில் முகாமிட்டனர். போட்டிகள் தினமும் பிற்பகல் 3 மணி முதல் நடந்து வந்தது. செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெறும் நட்சத்திர விடுதியை சுற்றி போலீசாரின் மூன்று அடுக்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டது.

இந்திய வரலாற்றில் முதல் முறையாக செஸ் ஒலிம்பியாட் போட்டி இந்தியாவில் அதிலும் குறிப்பாக நமது மாநிலமான தமிழகத்தில் நடைபெற்றது.

நிறைவு விழா

மாமல்லபுரத்தில் 12 நாட்களாக நடைபெற்று வந்த 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி, கண்கவர் நிகழ்ச்சிகளுடன் நேரு உள்விளையாட்டு அரங்கில் கோலாகலமாக நிறைவு பெற்றது.

ரூ.1 கோடி பரிசுத் தொகை

44வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகளில் பெண்கள் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்ற ‘இந்திய ஏ அணி’ வீரர்களுக்கு பரிசுத்தொகையாக ரூ. 1 கோடிக்கான காசோலையை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

vignesh-shivan-chess-olympiad-twitter

விக்னேஷ் சிவன்

44வது செஸ் ஒலிம்பியாட் போட்டியானது இந்தியாவில் முதல் முறையாக அதுவும் தமிழகத்தில் நடைபெற்றது. சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழா, நிறைவு விழாவில் இடம்பெற்ற பிரமாண்ட கலை நிகழ்ச்சி உள்ளிட்ட செயல்பாடுகளை திரைப்பட இயக்குநர் விக்னேஷ் சிவன் முன்னின்று கவனித்து வந்தார்.

இந்நிகழ்ச்சி எதிர்பார்த்ததை விட பிரம்மாண்டமாக அமைந்ததால், ரஜினி மற்றும் பல முன்னணி நடிகர் நடிகைகள் விக்னேஷ் சிவனுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

ஷியாமக் தாவர் டுவிட்

இந்நிலையில், நடன இயக்குநர் ஷியாமக் தாவர் தனது டுவிட்டர் பக்கத்தில் ஒலிம்பியாட் ஒத்திகை வீடியோவை வெளியிட்டு, தூக்கமில்லாத இரவுகள், கடுமையான ஒத்திகைகள், நமது அழகான இந்திய கலாச்சாரத்தின் சரியான கலவையை கலக்கவும், இவ்வளவு பெரிய கட்டத்தில் அதன் எல்லையை வெளிப்படுத்தவும். விக்னேஷ் சிவன் மற்றும் குழு இல்லாமல் இந்த பயணம் மறக்க முடியாததாக இருந்திருக்காது, அனைவரையும் நேசிக்கிறேன் என்று பதிவிட்டார்.

நன்றி தெரிவித்த விக்னேஷ் சிவன்

இதற்கு விக்னேஷ் சிவன் தனது டுவிட்டர் பக்கத்தில், உங்களைப் போன்ற ஒரு மேதை, சூப்பர் மனிதருடன் இது எப்போதும் வேடிக்கையாக இருக்கிறது.  எதிர்காலத்தில் இன்னும் சுவாரஸ்யமான ஒன்றைச் சேர்க்க காத்திருக்க முடியாது. உங்கள் குழுவிற்கும், தலை நிமிர்ந்து நிற்கும் புகழ்பெற்ற ஷியாமாக் தோரணையுடன் எப்போதும் தயாராக இருக்கும் அற்புதமான நடனக் கலைஞர்களுக்கும் அனைத்து வரவுகளும், கடவுள் ஆசிர்வதிக்கட்டும் என்று பதிவிட்டுள்ளார். 

இதோ அந்த பதிவு -