புர்ஜ் கலிஃபா கோபுரம் முன்பு பிறந்தநாளை கொண்டாடிய விக்னேஷ் சிவன்
விக்னேஷ் சிவன் தனது பிறந்தநாளை தனது மனைவி நயன்தாராவுடன் புர்ஜ் கலிபா முன் கொண்டாடினார்.
இயக்குநர் சிவன்
இயக்குனர், தயாரிப்பாளர், நடிகர், பாடகர், பாடலாசிரியர் என பன்முகங்களை திரை உலகில் பிரதிபலித்து வரும் இயக்குனர் விக்னேஷ் சிவனின் 37 ஆவது பிறந்தநாள் இன்று. நானும் ரவுடி தான் படத்தின் மூலம் மக்கள் மத்தியில் இடம்பிடித்த விக்னேஷ் சிவன் நடிகை நயன்தாரா மனதிலும் இடம் பிடித்தார்.
காதல் தோல்விகளால் துவண்டு கிடந்த நயன்தாராவுக்கு நம்பிக்கை துணையாக விக்னேஷ் சிவன் வந்த நிலையில், இருவரும் கிட்டத்தட்ட 7 ஆண்டுகள் காதலித்து இந்த ஆண்டு கடைசியில் திருமணம் செய்து கொண்டனர்.
புர்ஜ் கலிஃபா கோபுரம்
இந்த நிலையில் திருமணத்திற்குப் பிறகு இவர் காணும் முதல் பிறந்தநாள் என்பதால் இந்த பிறந்தநாள் பெரிதாக பார்க்கப்படுகிறது. அதன்படி பிரபலங்களும் ரசிகர்களும் விக்னேஷ் சிவனுக்கு வாழ்த்து கூறி வருகின்றனர்.
மேலும் நேற்றிரவு உலகின் உயரமான கட்டிடமாக புர்ஜ் கலிஃபா கோபுரம் முன்பு நயன்தாரா விக்னேஷ் சிவன் பிறந்தநாள் கொண்டாடியுள்ளனர்.