வாடகை தாய் மூலம் குழந்தை பெற்ற விவகாரம்; விசாரணை வளையத்தில் நயன்தாரா விக்னேஷ்? - அமைச்சர் எடுத்த அதிரடி முடிவு
நயன்தாரா விக்னேஷ் சிவனிடம் விசாரிப்பது பற்றி சுகாதாரத்துறை அதிகாரிகள் முடிவெடுப்பார்கள் என்று அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
நயன் விக்கி குழந்தை விவகாரம்
நடிகை நயன்தாரா - இயக்குனர் விக்னேஷ் சிவன் ஆகியோருக்கு வாடகை தாய் முறையின் மூலம் இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளன, இந்த விவகராம் பெரும் சர்ச்சையினை கிளப்பிய நிலையில் இது பற்றி விசாரணை செய்வோம் என்று அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்து இருந்தார்.
இருந்தாலும் சமூக வலைத்தளங்களில் அமைச்சர் சுப்பிரமணியனுக்கு எதிராக ஒரு தரப்பினர் குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர். ஏதோ அமைச்சர் மா.சுப்பிரமணியன் தானாக முன்வந்து விசாரணைக்கு இந்த விஷயத்தை எடுத்துக் கொள்ளப் போவதாக அறிவித்து போல ஒரு பிம்பம் கட்டமைக்கப்பட்டது.
அமைச்சர் மா.சு பதில்
பிறருடைய தனிப்பட்ட வாழ்க்கை.. குறிப்பாக நடிகை என்பதால் இவ்வாறு அமைச்சர் நடந்து கொள்கிறார் என்று குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. இருப்பினும் பத்திரிக்கையாளரின் குறிப்பிட்ட அந்த கேள்விக்கு வேறு எப்படிதான் அமைச்சர் பதில் அளிக்க முடியும்.
விசாரிக்கிறேன் என்றுதானே கூற முடியும் என்று திமுகவினர் சமூக வலைதளங்களில் பதிலடி கொடுத்து வந்த நிலையில் சர்ச்சைகளில் இருந்து விடுபடும் வகையில் இந்த விவகாரத்தை அதிகாரிகள் கையாள்வார்கள் என்று மா.சுப்பிரமணியன் இன்று தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.