விஜய்-லோகேஷ் சண்டை? எனது தவறுதான்.. விஜய் ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட விக்னேஷ் சிவன்!

Vijay Tamil Cinema Lokesh Kanagaraj Vignesh Shivan Tamil Actors
By Jiyath Oct 09, 2023 10:59 AM GMT
Report

இயக்குநர் விக்னேஷ் சிவன் தான் செய்த தவறுக்கு விஜய் ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டுள்ளார். 

லியோ திரைப்படம்

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் லியோ திரைப்படம் உருவாகியுள்ளது. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக த்ரிஷா நடித்துள்ளார். மேலும், சஞ்சய்தத், பிரியா ஆனந்த், சாண்டி மாஸ்டர், மிஷ்கின், மன்சூர் அலிகான், மேத்யூ தாமஸ், கௌதம் மேனன் மற்றும் ஆக்சன் கிங் அர்ஜுன் ஆகியோர் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்.

விஜய்-லோகேஷ் சண்டை? எனது தவறுதான்.. விஜய் ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட விக்னேஷ் சிவன்! | Vignesh Shivan Apologize Vijay Fans Lokesh Fight

படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். படத்திலிருந்து பாடல்களும் வெளிவந்து ஹிட் அடித்தது. வரும் 19ம் தேதி லியோ திரைப்படம் திரைக்கு வரவுள்ளது. இந்த படத்தின் டிரைலர் சில தினங்களுக்கு முன்னர் வெளிவந்து ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது. மேலும் டிரைலரின் ஒரு காட்சியில் விஜய் கெட்ட வார்த்தை பேசியது பெரும் சர்ச்சையையும் ஏற்படுத்தியது. தற்போது படத்தின் போஸ்டர்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வருவதுபோல வதந்திகளும் அதிகமாக பரவி வருகிறது.

அந்த வகையில் இணையவாசி ஒருவர் "'விஜய்க்கும் லோகேஷுக்கும் பிரச்னை நடந்தது உண்மைதான். எங்களுக்கு எல்லாம் தெரியும்' என்பதுபோல ட்வீட் ஒன்றை பதிவிட்டிருந்தார்.  இந்த பதிவை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் லைக் செய்து, பின்னர் நீக்கிவிட்டார். 

மன்னிப்பு கோரிய இயக்குநர்

இதனை ஸ்க்ரீன்ஷாட் எடுத்த அந்த இணையவாசி "விக்னேஷ் சிவனும் உண்மை என்று அறிந்து கொண்டுதான், என்னுடைய பதிவிற்கு லைக் போட்டிருக்கிறார்" என்று மீண்டும் பதிவிட்டார். இதனை பார்த்த விஜய் ரசிகர்கள் விக்னேஷ் சிவனை கடுமையாக விமர்சித்து வந்தனர்.

விஜய்-லோகேஷ் சண்டை? எனது தவறுதான்.. விஜய் ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட விக்னேஷ் சிவன்! | Vignesh Shivan Apologize Vijay Fans Lokesh Fight

இந்நிலையில் இதற்கு விளக்கமளித்து இயக்குநர் விக்னேஷ் சிவன் ட்வீட் ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் "அன்பான விஜய் சார் ரசிகர்களே, லோகி ரசிகர்களே… குழப்பத்திற்கு மன்னிக்கவும். லோகேஷ் சாரின் படைப்புகள், பணிகள், நேர்காணல்கள் எனக்கு மிகவும் பிடிக்கும். அதனால், இந்த ட்வீட்டில் இருக்கும் பதிவைப் படிக்காமலே லோகேஷின் நேர்காணலை மட்டும் பார்த்துவிட்டு லைக் போட்டுவிட்டேன். வீடியோவையும், அப்பதிவில் எழுதப்பட்டிருப்பதையும் சரியாகக் கவனிக்காமல் லைக் போட்டது என் தவறுதான். கொஞ்சம் கவனமாக இருந்திருக்க வேண்டும், மன்னிக்கவும்.

இது எனது தவறு! இதற்காக உலகம் முழுவதும் உள்ள அனைத்து தளபதி ரசிகர்களிடமும் எனது மன்னிப்பைத் தெரிவித்துக் கொள்கிறேன். இனிமேல், நான் செய்த இந்தத் தவற்றைப் பற்றி மேலும் மேலும் கருத்து தெரிவிப்பதில் உங்கள் நேரத்தை வீணடிப்பதை நிறுத்துங்கள். 'லியோ' மற்றும் படம் தொடர்பான அனைத்தையும் கொண்டாடத் தொடங்குவோம்! அக்டோபர் 19-ம் தேதி இந்த பிளாக்பஸ்டர் படத்தைப் பார்க்க உற்சாகத்துடன் நானும் உங்களுடன் காத்திருக்கிறேன்!" என்று பதிவிட்டுள்ளார்.