‘அமைதிக்கு முன் ஒரு புயல்...’ விக்னேஷ் சிவன் வெளியிட்ட ‘தல’ போட்டோ - தெறிக்க விடும் ரசிகர்கள்...!
இயக்குநர் விக்னேஷ் சிவன் வெளியிட்ட நடிகர் அஜீத் புகைப்படம் தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
விக்னேஷ் சிவன்
தமிழ் சினிமாவில் பிரபல இயக்குநராக இருப்பவர் விக்னேஷ் சிவன். இவர் தயாரிப்பாளர், நடிகர், பாடகர் மற்றும் பாடலாசிரியர் என பன்முகத் திறமைக் கொண்டவர்.
இவர் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாகவும், லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வரும் நடிகை நயன்தாராவை கடந்த ஜூன் 9-ம் தேதி காதல் திருமணம் செய்து கொண்டனர்.
தன் திருமணம் முடிந்த நிலையில் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா தேனிலவுக்காக தாய்லாந்து நாட்டிற்கு சென்றனர். உற்சாகமாக தேனிலவு கொண்டாடிய அவர்கள் தங்களது புகைப்படங்களை சமூக வளைத்தலங்களில் பதிவிட்டு வந்தனர். அந்த புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலாக பரவியது.
இரட்டை குழந்தை
சமீபத்தில் திருமணம் நடந்து 4 மாதமே ஆன நிலையில், இயக்குநர் விக்னேஷ் சிவன் தனது டுவிட்டர் பக்கத்தில், நயன்தாராவும், நானும் அப்பா, அம்மா ஆகிவிட்டோம் என்று இரட்டை குழந்தையின் புகைப்படத்தை வெளியிட்டார். இது தமிழ் சினிமாத்துறையில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்போது இவர்களின் இரட்டை குழந்தை விவகாரம் பேச்சு பொருளாக மாறியுள்ளது.
அஜித் புகைப்படம் வெளியிட்ட விக்கி
இந்நிலையில், சமூகவலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் விக்னேஷ் சிவன், தற்போது ஒரு புகைப்படத்தை டுவிட்டரில் பகிர்ந்துள்ளார்.
அந்த புகைப்படத்தில், அஜீத்தின் லேட்டஸ்ட் புகைப்படத்தை வெளியிட்டு, ‘அமைதிக்கு முன் ஒரு புயல்...’ என்று குறிப்பிட்டுள்ளார்.
தற்போது, இந்த புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்தப் புகைப்படத்திற்கு அஜித் ரசிகர்கள் லைக்குகளை அள்ளி தெறித்து வைரலாக்கி வருகின்றனர்.
A Storm before the calm ??????????????? pic.twitter.com/yhRZufalFP
— Vignesh Shivan (@VigneshShivN) October 13, 2022