9 வருட லவ் பிரேக் அப்; நயன்தாரா போல் விக்னேஷ் சிவனுக்கும்.. முன்னாள் காதலி யார் தெரியுமா?

Nayanthara Tamil Cinema Vignesh Shivan
By Sumathi Feb 14, 2024 05:30 PM GMT
Report

விக்னேஷ் சிவன் தனது முன்னாள் காதல் குறித்து மனம் திறந்துள்ளார்.

விக்னேஷ் சிவன்

நட்சத்திர தம்பதிகளான நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவரும் காதலித்து திருமணம் செய்துக்கொண்டனர். இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். தொடர்ந்து இருவரும் கேரியரில் பிஸியாகவே இருந்து வருகின்றனர்.

nayanthara - vignesh sivan

நடிப்பு மட்டுமன்றி பிற தொழில்களிலும் கவனம் செலுத்தி நயன்தாரா முதலீடு செய்துவருகிறார். இவர்கள் இருவரது காதல் கிசு கிசு செய்திகள் வர தொடங்கியது முதலே தற்போது வரை ஹாட் டாப்பிக்கில் இருந்து வருகின்றனர்.

பீரியட்ஸ் நேரத்தில் நயன்தாரா இப்படித்தான் இருப்பாங்க - போட்டுடைத்த விக்னேஷ் சிவன்!

பீரியட்ஸ் நேரத்தில் நயன்தாரா இப்படித்தான் இருப்பாங்க - போட்டுடைத்த விக்னேஷ் சிவன்!

முதல் காதல் 

இந்நிலையில், விக்னேஷ் சிவன் அளித்த பேட்டி ஒன்றில் சினிமாவுக்கு வருவதற்கு முன்பே விக்னேஷ் சிவன் ஒரு பெண்ணை ஒன்பது வருடமாக காதலித்து வந்தாராம். தீபாவளி பண்டிகை அன்று தனது காதலியை அம்மாவிடம் அறிமுகம் செய்ய வீட்டுக் அழைத்து சென்றிருக்கிறார்.

nayanthara family

பண்டிகை நாட்களில் கூட புடவை கட்டாமல் ஜீன்ஸ், டி-ஷர்டில் வந்தது அவரது அம்மாவுக்கு பிடிக்கவில்லையாம். அதோடு மட்டுமல்லாமல் காதலி மற்றும் அம்மா இருவருக்கும் இடையே செட்டாகவில்லையாம்.

சின்ன சின்ன விஷயங்களில் கூட அட்ஜஸ்ட்மென்ட் செய்து கொள்ள மாட்டாராம். எங்களுக்குள்ளும் சுமுகமான உறவு இல்லாத காரணத்தினால் பிரேக் அப் செய்து விட்டதாக தெரிவித்துள்ளார்.