தமிழ் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த விக்னேஷ் சிவன் - வைரலாகும் வீடியோ

Vignesh Shivan
By Nandhini May 02, 2022 10:10 AM GMT
Report

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா ஆகியோர் நடிப்பில் ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ படம் நேற்று தமிழகம் முழுவதும் வெளியாகியுள்ளது.

இப்படத்தில், கதிஜாவாக சமந்தாவும், கண்மணியாக நயன்தாராவும், சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர். இவர்கள் இருவரையும் காதலிப்பவராக விஜய் சேதுபதி நடித்துள்ளார்.

படம் வெளியானதையடுத்து நயன்தாரா, தனது காதலர் விக்னேஷ் சிவனுடன் திருப்பதி கோவிலுக்கு சென்றார். அங்கு எடுத்துக்கொண்ட புகைப்படத்தை விக்னேஷ் சிவன் சமூக வலைத்தளத்தில் பகிர்ந்தார். இவர்களின் இருவரின் புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாக பரவியது.

இந்நிலையில், இப்படம் நல்ல வசூலை பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. வெளியான முதல் நாளில் சென்னை பாக்ஸ் ஆபிஸில், சென்னையில் மட்டும் ரூ. 66 லட்சம் வசூலை தாண்டி ‘காத்து வாக்குல இரண்டு காதல்’ படம் சாதனை படைத்துள்ளது. இதனால், நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் மகிழ்ச்சியில் துள்ளி குதித்துள்ளனர்.

இந்நிலையில், சமூகவலைத்தளத்தில் இயக்குநர் விக்னேஷ் சிவன் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த வீடியோவில், பெரும்பான்மையான பொது மக்களின் ரசனைகளிலிருந்து தனித்த ஒரு சில சினிமா விமர்சகர்களின் கூற்றுகளை பொய்யாக்கி திரையரங்குகளை திருவிழாவாக மாற்றி வரும் தமிழ் மக்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்.. என்று பதிவிட்டுள்ளார். 

தமிழ் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த விக்னேஷ் சிவன் - வைரலாகும் வீடியோ | Vignesh Shivan