AK62 திரைபட தயாரிப்பில் இருந்து விலகிய விக்னேஷ் சிவன் - சமரசம் செய்த நடிகை நயன்தாரா
அஜித் நடிக்க இருந்த திரைப்படத்தை இயக்க இருந்த விக்னேஷ் சிவன் திடீரென விலகியதால் அவரது மனைவியும் நடிகையுமான நயன்தாரா சமரசம் செய்ததாக தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
அறிமுகம்
நடிகர் சிம்பு நடித்த போடா போடி திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் இயக்குநர் விக்னேஷ் சிவன். பின்னர் நடிகை நயன்தாரா மற்றும் விஜய் சேதுபதி நடித்த ரவுடி பேபி திரைப்படம் பெரிய அளவில் ஹிட்டானது.
இப்படத்தின் வெற்றிக்கு பிறகு விக்னேஷ் சிவன் நடிகர் சூர்யாவுடன் இணைந்து தானா சேர்ந்த கூட்டம் படத்தை இயக்கினார்.
இந்த நிலையில், விஜய் சேதுபதி, நடிகை நயன்தாரா மற்றும் சமந்தா ஆகியோரை முக்கிய வேடங்களில் நடித்த ரெண்டு காதல் திரைப்படம் கடந்த ஆண்டு வெளியானது.
இதையடுத்து அவருக்கு பெரிய ஸ்டாரான நடிகர் அஜித்குமாரை வைத்து நடிக்க இருக்கும் திரைப்படம் ஏகே62 படத்தை இயக்க இருந்தார்.
நடிகர் அஜித்தை வைத்து படம் இயக்க உள்ள மகிழ்ச்சியில் இனிமேல் எல்லாம் சரியாகிவிடும் என்ற உற்சாகத்தில் இருந்தார் விக்னேஷ் சிவன்.
கடவுள் அருளால் கனவுகள் அனைத்தும் நனவாகும். இப்படி ஒரு நல்ல வாய்ப்பை கொடுத்ததற்கு நன்றி அஜித் சார். அந்த மகிழ்ச்சியை வார்த்தைகளால் விவரிக்க முடியாது என்று விக்னேஷ் சிவன் பதிவிட்டு இருந்தார்.
திடீரென விலகிய விக்னேஷ் சிவன்
அஜித் படத்திற்காக விக்னேஷ் சிவன் தயாரித்த ஸ்கிரிப்ட் அஜித்தை வைத்து ஏகே62 என மாற்றப்பட்டது. கதை தயாரிப்பு நிறுவனத்திற்கு பிடிக்கவில்லை.
இதனால் மிகுந்த வருத்தத்தில் உள்ளாராம் விக்னேஷ் சிவன். படப்பிடிப்பை தொடங்கும் முன்பே லைக்கா நிறுவனம் அதிலிருந்து விலகியுள்ளது. இதற்கு முன்பும் இதுபோன்ற சம்பவம் நடந்துள்ளது.
2019 ஆம் ஆண்டு நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கும் படத்தை விக்னேஷ் சிவன் இயக்குவார் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்க இருப்பதாகவும், படம் 2020ல் வெளியாகும் என்றும் கூறப்பட்டது. ஆனால் படத்தின் பட்ஜெட் அதிகரித்ததால் படப்பிடிப்பு தொடங்கும் முன்பே படத்தை ரத்து செய்ததாக லைகா நிறுவனம் அறிவித்தது. இதே நிலை தான் இப்போது ஏகே 62 படத்திற்கும் வந்துள்ளது.
சமரசம் செய்ய முயன்ற நயன்தாரா
200 பட்ஜெட்டில் லைக்கா நிறுவனம் திட்டமிட்டிருந்த நிலையில், விக்னேஷ் சிவன் கதை திருப்பதிகரமாக இல்லாதததால் அவரை நீக்கிவிட்டு மகிழ் திருமேனியை இயக்குநராக்க உள்ளதாகவும் இதற்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஒரிரு நாட்களில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் ஏகே 62 திரைப்படத்தில் இருந்து விக்னேஷ் சிவன் இடம் பெற்றாததால் #JusticeforVigneshShivan என்ற ஹேஷ்டேக் நெட்டிசன்களால் டிரெண்டாகி வருகிறது.
இதனிடையே விக்னேஷ் சிவனின் மனைவி நடிகை நயன்தாரா தயாரிப்பு நிறுவனம் லைக்கா உடன் சமரசம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டதாகவும் ஆனால் அதில் உடன்பாடு ஏற்படவில்லை என்றும் கூறப்படுகிறது.

வெளிநாடொன்றில் பாடசாலை மீது இராணுவம் அகோர குண்டுவீச்சு : ஆசிரியர்கள்,மாணவர்கள் என பலர் பலி IBC Tamil

இளைஞன் மீது தாக்குதல் : தப்பிச் சென்ற டீச்சர் அம்மாவை கைது செய்ய மூன்று காவல்துறை குழுக்கள் IBC Tamil
