நடுவானில் பறந்த விமானத்தில் நயன்தாராவுக்கு முத்தம் கொடுத்த விக்னேஷ் சிவன்..!

Thahir
in பிரபலங்கள்Report this article
ஸ்பெயின் நாட்டிற்கு சுற்றுலா சென்ற நயன்தாரா, விக்னேஷ் சிவன் ஜோடி புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது.
காதல் திருமணம்
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையான நயன்தாராவும் இயக்குநர் விக்னேஷ் சிவனும் கடந்த ஜுன் 9-ம் தேதி காதல் திருமணம் செய்து கொண்டனர்.
மாமல்லபுரத்தில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் நடைபெற்ற திருமணத்தில் ஏராளமான திரைப்பிரபலங்கள் கலந்து கொண்டனர்.
2-வது ஹனிமூன்?
திருமணம் முடிந்த பின்னர் தாய்லாந்து நாட்டிற்கு ஒரு வாரம் சுற்றுலா சென்ற தம்பதியினர் சென்னை திரும்பினர். அதனை தொடர்ந்து இருவரும் தங்களது வேளைகளில் பிசியானார்கள்.
விக்னேஷ் சிவன் செஸ் ஒலிம்பியாட் போட்டி நிகழ்ச்சியை இயக்கினார். இந்நிலையில் தற்போது நயன்தாரா, விக்னேஷ் சிவன் இருவரும் ஸ்பெயின் நாட்டிற்கு சுற்றுலா சென்றுள்ளனர்.
விமானத்தில் நயன்தாராவுக்கு முத்தம்
அங்கு 10 நாட்கள் தங்கிய பின்னர் மீண்டும் சென்னை திரும்பவுள்ளதாக கூறப்படுகிறது. அதனை தொடர்ந்து நயன்தாரா இந்தியில் உருவாகும் 'ஜவான்' படப்பிடிப்பில் கலந்து கொள்ளவுள்ளதாகவும், விக்னேஷ் சிவன் 'ஏகே 62' படத்திற்கான பணிகளை துவங்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த நிலையில் நயன்தாரா, விக்னேஷ் சிவன் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. விக்னேஷ் சிவன் பதிவிட்டுள்ள புகைப்படம் ஒன்றில் விமானத்தில் நயன்தாராவின் கையில் முத்தமிடுகிறார்.