இந்த உயரம் இருந்தா தான் சேர முடியும்? பல்கலைக்கழகத்தின் நூதன கட்டுப்பாடு
ஒரு படிப்பில் சேர கல்வி தேர்ச்சி மட்டுமே தகுதியாக இருக்க வேண்டும். அதுவே உலக நியதியாக இருந்து வருகிறது. ஆனால், ஒரு பல்கலைக்கழகத்தில் புதியதொரு நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.
அதாவது குறிப்பிட்ட உயரம் இருந்தால் மட்டுமே பல்கலைக்கழகத்தில் இணைய முடியுமாம். அப்படி என்னடா உயரம் என்றால், ஆண் என்றால் 1.65 மீட்டர் உயரமும், பெண் என்றால் 1.58 உயரமும் இருக்கவேண்டுமாம்.
இந்த வினோத நிபந்தனை வியட்நாம் நாட்டில் அமைந்துள்ள ஹனோய் மாகாண பல்கலைக்கழகத்தில் விதிக்கப்பட்டுள்ளது. பெறும் விமர்சனங்களை இது பெற்றுள்ளது. வருங்காலத் தலைவர்களுக்கு நல்ல தோற்றமும் ஆரோக்கியமும் இருப்பது முக்கியம் என்ற அடிப்படையில் இது கொண்டுவரப்பட்டதாக சில தகவல்கள் உள்ளன
இவற்றில் சில, விதிவிலக்குகளும் இருக்குதாம். ஆனால், அதற்கும் சில கட்டுப்பாடுகள் உள்ளன என்பதே இங்கு முக்கியம்.
நிர்வாகம், பாதுகாப்புத் துறையில் படிக்க விரும்புவோருக்கு மட்டுமே குறிப்பிட்ட உயரம் தேவைப்படும் என்று இப்போது பல்கலைக்கழகம் சொல்கிறது.