சாலை விதிமீறல் குறித்து தகவலளித்தால் ரூ.17,000 பரிசு - கேமரா உடன் சாலையில் அமர்ந்த மக்கள்
சாலை விதிமீறல் குறித்து தகவலளிபவர்களுக்கு வெகுமதி அளிப்பதாக அரசு அறிவித்துள்ளது.
சாலை விதிமீறல்
சாலை விதிகளை முறையாக கடைபிடிக்காமல் ஒவ்வொரு ஆண்டும் 1.19 மில்லியன் பேர் உலகம் முழுவதும் சாலை விபத்துகளில் இருப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
ஒவ்வொரு நாட்டிலும் இந்த விபத்துகளை தடுக்க சாலை விதிகள் அமலில் உள்ளன. சாலை விதிகளை மீறுவோருக்கு அந்த நாட்டின் சட்டவிதிகளுக்கு ஏற்ப அபராதம் அல்லது சிறை தண்டனை விதிக்கப்படுகிறது.
வியட்நாம்
இந்நிலையில், வியட்நாம் அரசானது சாலை விதிகளை மீறுவோருக்கான அபராதத்தை 30 முதல் 50 மடங்கு உயர்த்தியுள்ளது. இதன்படி, மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டினால், 18 மில்லியன் முதல் 20 மில்லியன் வியட்நாம் டாலர் அபராதம் விதிக்கப்படும்.
சிக்னல்களில் நிற்க தவறினால் முன்னர் 1 மில்லியன் வியட்நாம் டாலராக இருந்த அபராத தொகை தற்போது 6 மில்லியனாக உயர்த்தப்பட்டுள்ளது. முன்னால் செல்லும் வாகனங்களை அதிக வேகத்தில் துரத்தினால் 50 மில்லியன் VND அபராதமாக விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெகுமதி
இந்நிலையில் அனைத்து இடங்களிலும் போக்குவரத்து காவலர்கள் இந்த விதி மீறலை கண்காணிக்க முடியாத நிலையில், இந்த விதி மீறல் குறித்து புகைப்படமாகவோ அல்லது வீடியோ ஆதாரமாகவோ போக்குவரத்து காவல்துறைக்கு தகவல் அளிப்பவர்களுக்கு அபாரதத்தில் 10% வெகுமதியாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ரூ.17,000 வரை பரிசு கிடைக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. தகவல் அளிப்பவர்களின் பாதுகாப்பு மற்றும் தனியுரிமையை கருத்தில் கொண்டு தகவல் அளிப்பவர்களின் விவரங்கள் வெளியிடப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அபராதம் மூலம் கிடைக்கும் பணத்தை சாலை பாதுகாப்பை மேம்படுத்துதல் மற்றும் போக்குவரத்து அதிகாரிகளின் ஊதியம் ஆகியவற்றிக்கு பயன்படுத்த உள்ளதாக வியட்நாம் அரசு அறிவித்துள்ளது. இதற்காக "VNeTraffic" என்ற செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.