வியட்நாம் படகு விபத்து: தமிழகம் வந்தடைந்த உடல்கள்

Vietnam
By Fathima Jul 14, 2026 04:09 AM GMT
Report

வியட்நாம் படகு விபத்தில் உயிரிழந்த 10 தமிழர்களின் உடல்கள் தமிழகம் வந்தடைந்தன.

வியட்நாம் படகு விபத்து

தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா உட்பட தென் மாநிலங்களில் இருந்து வியட்நாமுக்கு சுற்றுலா சென்றனர்.

கடந்த 11ம் தேதி படகு சவாரியில் ஈடுபட்டிருந்த போது, எதிர்பாராதவிதமாக படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 15 பேர் பலியாகினர், இவர்களில் 10 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள்.

இவர்களில் பெரும்பாலானோர் செல்போன் நிறுவனத்தின் சார்பில் அவர்களது பணியை பாராட்டி சுற்றுலாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

வியட்நாம் படகு விபத்து: தமிழகம் வந்தடைந்த உடல்கள் | Vietnam Boat Crash Tamilnadu Updates

தமிழகம் வந்தடைந்த உடல்கள்

உயிரிழந்தவர்களின் உடல்களை இந்தியா கொண்டு வருவதற்கான ஏற்பாடுகளை இந்திய தூதரகம் முன்னெடுத்தது.

இந்நிலையில் 15 பேரின் உடல்களும் வியட்நாம் ஏர்லைன்ஸ் விமானம் மூலம் நேற்றிரவு மும்பை வந்தடைந்தது.

அங்கிருந்து 4 பேரின் உடல்கள் சென்னைக்கும், 6 பேரின் உடல்கள் கோவைக்கும் சென்றடைந்தது, ஆம்புலன்ஸ் மூலம் அவரவர்களின் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.