வியட்நாம் படகு விபத்து: பிறந்தநாளில் உயிரிழந்த சோகம்
வியட்நாமில் சுற்றுலா பயணிகள் சென்ற படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 15 இந்தியர்கள் உயிரிழந்தனர், இவர்களில் 10 பேர் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள்.
கடைசி வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ்
அவர்களில் முருகபிரபு என்பவரும் ஒருவர், செல்போன் கடை நடத்தி வருகிறார்.
சிறப்பாக செயல்பட்டதால் செல்போன் நிறுவனம் சார்பில் வியட்நாம் சுற்றுலாவுக்கு அனுப்பி வைத்துள்ளனர், அவருடன் அவரது நண்பர் நிர்மல்குமாரும் சென்றிருந்தார்.
அங்கே படகு சவாரி சென்ற போது விபத்தில் சிக்கினார், இறப்பதாக முன்பாக காலை சுற்றுலா சென்ற இடங்களை வாட்ஸ்அப் ஸ்டேட்டஸில் வைத்தார், அதுவே அவரது கடைசி ஸ்டேட்டஸாக அமைந்துவிட்டது.

பிறந்த நாளில் மரணம்
தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த தொழிலதிபர் செந்தில் குமார் என்பவரும் ஒருவர், தன்னார்வ தொண்டு நிறுவனத்தில் உறுப்பினர் என்பதுடன் சமூக சேவைகளிலும் ஈடுபட்டு வந்துள்ளார், இவருக்கு நேற்று பிறந்தநாள் ஆகும்.
திருச்சியை சேர்ந்த 3 பேர்
படகு கவிழ்ந்து உயிரிழந்தவர்களில் திருச்சியை சேர்ந்த அழகுராஜன், பாலாஜி மற்றும் ஷேக் அப்துல்லா, அழகுராஜன் செல்போன் மாவட்ட விற்பனை மேலாளராகவும், பாலாஜி செல்போன் விநியேகஸ்தராகவும், ஷேக் அப்துல்லா செல்போன் விற்பனை கடையும் நடத்தியும் வந்துள்ளார்.
